சந்தர் ஜீ பகிடிகள்...

சனத்தொகை பற்றி ஓர் ஆசரியர் கற்பிக்கின்றார் “இந்தியாவில் ஒவ்வொரு 10 வினாடிக்கும் ஒரு பெண் ஒரு குளந்தையைப் பெறுகின்றாள்.
சந்தர் ஜீ : நாங்கள் அவளைக் கண்டுபிடித்து நிறுத்த வேண்டும்


சந்தர் ஜீ : ஏன் இவங்களெல்லாம் தலை தெறிக்க ஓடுறாங்க?
மற்றவர் : இது ஓட்டப் பந்தயம். முதலில் ஓடுபவருக்கு பரிசு உண்டு
சந்தர் ஜீ : முதலாவது ஓடுபவருக்குத்தான் பரிசு என்றால் எதுக்கு மற்றவர்கள் பின்னால் கலைத்துக்கொண்டு ஓடுகினம்?


ஆசிரியர் : “நான் ஒருவனைக் கொலை செய்தேன்”. இதன் எதிர் காலம் என்ன?
சந்தர் ஜீ : “நீங்கள் சிறைக்குப் போவீர்கள்”


சந்தர் ஜீ ஒரு தடவை வேலைக்கு விண்ணப்பம் நிரப்பினார். அங்கு ஒரு பகுதியில் சம்பள எதிர்பார்ப்பு என்று இருந்தது. நீண்ட நேர யோசனையின் பின்பு சந்தர் ஜீ ஆம் என்று நிரப்பினார்


பேராசிரியர் சந்தர் ஜீ ஒரு தடவை பிளம்பரை (plumber) பல்கலைக் கழகத்திற்கு வரச்சொன்னாராம். ஏன் என்றால் எப்படி பரீட்சை வினாத் தாள்கள் வெளியே கசிகின்றன என அறியத்தான்.


சந்தர் ஜீ தனது வீட்டு தோட்டக்காரனுக்கு : பூ மரங்களுக்கு தண்ணியூத்துப்பா!
தோட்டக்காரன் : ஏற்கனவே வெளியே மழை பெய்யுதே?
சந்தர் ஜீ : அதனால் என்ன? குடைய பிடிச்சுக்கொண்டு தண்ணி ஊத்துறது…


சந்தர் ஜீக்கு ஒரு தடவை சீட்டிழுப்பில் 20 கோடி பரிசு வீழ்ந்தது. முகவர் வரி முதலியவற்றை கழித்து விட்டு மீதம் 15 கோடியைக் கொடுத்தார். கோபம் அடைந்த சந்தர் ஜீ சொன்னார் “ என்னுடைய 20 கோடியைத்தா! இல்லா விட்டால் என் 20 ரூபா டிக்கட் காசைத்தா!”


சந்தர் ஜீ ஒரு தடவை அருங்காட்சியகத்திற்குச் சென்றார்.
சந்தர் ஜீ விளக்க உரைஞருக்கு : என்னப்பா இது புதுச் சித்திரம் என்ற பெயரில இப்படி பயங்கரமான உருவமெல்லாம் வரைவீங்களா?”
விளக்க உரைஞர் : மன்னிக்கோணும் நீங்க பார்த்துக் கொண்டு இருப்பது ஒரு கண்ணாடி


சந்தர் ஜீ ஒரு தடவை தன் காதலை ஒரு பெண்ணிடம் சொன்னார்.
பெண் : எனக்கு உங்களயும் விட 1 வயது கூடவே?
சந்தர் ஜீ : அதனால் என்ன அடுத்த வருடம் உன்ன நான் கட்டிக்கிறேன்


சந்தர் ஜீ மிக மெதுவாக ஒரு கடிதம் ஒன்றை எழுதிக்கொண்டு இருந்தார்
நண்பர் : ஏன்யா இவ்வளது ஸ்லோவா கடிதம் எழுதறா?
சந்தர் ஜீ : என் மகன் இப்பத்தான் எழுதப் பழகிறான் அவன் மெதுவாகத்தான் வாசிப்பான் அதுதான்……


சந்தர் ஜீ தன் மகனுக்கு : உன் வயசில வாஷிங்டன் எப்படியெல்லாம் கஷ்டப் பட்டு சம்பாதித்தார் தெரியுமா? நீயும் இருக்கிறியே! தண்டச் சோறு???
மகன் : உங்க வயசில அவர் அமேரிக்க ஜனாதிபதி ஆகிட்டார். நீங்களும் இருக்கிறீங்களே??? பொறுப்பில்லாத அப்பன்!.

0மறுமொழிகள்:

Post a Comment

இந்த இடுகைக்கு தொடுப்புகள்:

Create a Link

<< முகப்பு