த டாவின்சி கோட் திரைவிமர்சனம்

Photobucket - Video and Image Hosting
2000 ம் ஆண்டுகளாக பூட்டி வைக்கப்பட்டுள்ள இரகசியம். இது வெளியானால் மனித விழுமியத்தின் ஆணி வேர் ஆட்டம் காணும். இது தான் த டா வின்சி கோட் திரைப்படத்தின் உள்ளடக்கம். திரைப்படமும் சரி நாவலும் சரி பெரியளவில் சர்ச்சைக்குள்ளானது. காரணம் கதையில் பயன் படுத்தப்பட்ட ஒரு புனிதர் உலக அளவில் அதிகமானோர் மதிக்கும் யேசுநாதர்.

டாம் ஹாங் சின்னங்கள் (Symbols) பற்றிய ஆராய்ச்சி செய்யும் ஒரு அமேரிக்கப் பேராசிரியர். பாரிசுக்கு ஒரு விரிவுரை நிகழ்த் வந்த இடத்தில் விதி விளையாட ஆரம்பிக்கின்றது.

பாரிஸ் அருங்காட்சியத்தில் நூதனப் பொருட்களின் காப்பாளராக பணியாற்றும் ஒருவர் கொலை செய்யப்படுகின்றார். இறந்த நூதனசாலை பணியாளர் தன் நெஞ்சில் நட்சத்திரக்குறி போன்ற தடயங்களை கீறி விட்டு மரணித்து விடுகின்றார். பாரீஸ் காவல் துறை டாம் ஹாங்கின் உதவியை நாடுகின்றது. பின்பு இறந்தவரின் பேத்தியுடன் சேர்ந்துகொள்ளும் டாம் ஹாங் பல புதிர்களை ஒன்றின் பின் ஒன்றாக விலக்குகின்றார். இதே வேளையில் காவல்துறையின் சந்தேகம் டாம் ஹாங்கின் பக்கம் திரும்புகின்றது. இப்படியாக கதை நகர்கின்றபோது யேசு நாதருக்கு சந்ததி உள்ளமை தெரிய வருகின்றது.

இதற்கிடையில் யேசு பிரானின் சந்ததி பற்றிய ஆதாரங்களை அழிக்க ஒரு குழுவும், இரகசியமாக பாதுகாக்க இன்னுமொரு குழுவும் அலைந்து திரிகின்றது. இதில் முன்னைய குழுவால் டாம் ஹாங்கும் நாயகியும் துரத்தப்படுகின்றனர். நம்பிக்கை நம்பிக்கைத் துரோகம் என்று கதை விறு விறுப்பாக நீள் கின்றது.

கதையின் இறுதியில் தற்போதைய வாரிசு யாரேன்று தெரியவருகின்றது (அதை இங்கு கூறினால் நீங்கள் படம் பார்ப்பதில் அர்த்தம் இல்லை).
ஒவ்வொரு கட்டத்திலும் பல வரலாற்று உண்மைகளை கதையுடன் இணைத்துள்ளவிதம் ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றது. குறிப்பாக டா வின்சியின் இறுதி இராப்போசனம் சித்திரத்தில் செய்யப்படும் வெட்டுக் கொத்து (நம்ப முடியாமல் நானும் போடோ ஷாப்பில் செய்து பார்த்தேன் சரியாகத் தான் பொருந்துகின்றது).

ஏது எவ்வாறாயினும் இப்படி யொரு படம் எடுக்கத் துணிவு, நிறைந்த படைப்பாற்றல் நிச்சயம் வேண்டும். கிறீஸ்தவர்களின் மனதை இப்படம் புண்படுத்தும் என்பதில் ஐயமில்லை. இலங்கையில் இப்படத்தை தடைசெய்து விட்டார்கள் (திருட்டு VCD ல் பார்த்தேன்). எனக்கென்னவோ மற்றவாகளின் உணர்வுகளுடன் விளையாடுவது அவ்வளவாகப் பிடிக்கவில்லை அதற்காக கதையை இரசிக்காமலும் இருக்க முடியவில்லை.

8மறுமொழிகள்:

Anonymous Anonymous மொழிந்தது...

ur blog is good . sankar from chennai

3:12 pm  
Blogger Jay மொழிந்தது...

நன்றி சங்கர் உங்கள் வரவை தொடர்ந்து எதர்பார்க்கின்றேன்.

10:50 am  
Blogger CAPitalZ மொழிந்தது...

நான் இன்னும் படம் பார்க்கவில்லை. நீங்கள் விவரித்ததைப் பார்க்க இன்னும் விறுவிறுப்பாகவே இருக்கிறது.

_______
CAPital
http://1paarvai.wordpress.com/

7:58 pm  
Blogger Jay மொழிந்தது...

உங்கள் அன்புக்கு நன்றி.....

12:18 pm  
Blogger Chandravathanaa மொழிந்தது...

கதையின் நம்பகத் தன்மை பற்றி எனக்குத் தெரியவில்லை.
ஆனால் படத்தை பார்க்கும் பொது மிகுந்த சுவாரஸ்யமும் அடுத்து வரப் போகும் காட்சிக்கான எதிர்பார்ப்பும் இருந்தது. சோர்வை ஏற்படுத்தாத விதமாக நகர்ந்தது படம்.

11:34 am  
Blogger Jay மொழிந்தது...

ஆம் சந்திரவதனா நீங்கள் கூறியது சரி கதை எவ்வளவு தூரம் உண்மை என்று எனக்குத் தெரியாது... கதை விறு விறுப்பாக இருந்தது என்பது மட்டும் உண்மை....
நீங்கள் கதைப் புத்தகத்தை வாசிக்கவில்லையா? அது திரைப்படத்தைவிட விறு விறுப்பாக இருந்தது என்பது என் கருத்து.....

5:49 pm  
Blogger Chandravathanaa மொழிந்தது...

இல்லை மயூரேசன்.
இதுவரை அப்புத்தகம் எனக்குக் கிடைக்கவில்லை.

6:11 pm  
Blogger ஸ்வர்ணரேக்கா மொழிந்தது...

s. of course. the story is very interesting when compare to the film. Actually the film (due to its time consnstraint) can't display the story fully.

7:25 am  

Post a Comment

<< முகப்பு