10 மணிக்கு மேல் தொலைக்காட்சி இல்லை
சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்பு சிங்கப்பூர் பிரதமர் ஓர் நாட்டின் தலை நகருக்குச் சென்றார். அந்த நகரின் எழிலைப் பார்த்து இரசித்த பிரதமர் தன் நாடும் ஒரு நாள் இப்படி மாறும் என்று கூறினார். அந்த நாடு வேறெந்த நாடுமில்லை நம்ம இலங்கைதான். இன்று சிங்கபூர் எங்கே? இலங்கை எங்கே?. மலையும் மடுவும் போலே.
இலங்கை தற்போது தூரநோக்கற்ற நகைச்சுவையாளர்களால் ஆளப்பட்டு வருகின்றது என்பதற்கு அடுத்த உதாரணம். “இரவு 10 மணிக்கு மேல் தொலைக்காட்சி நிறுவனங்களின் ஒளிபரப்பிற்குத் தடை” காரணம் மின்சார சேமிப்பாம்.
மீறி ஒளிபரப்பும் நிறுவனங்களிற்கு தண்டப்பணம் அறவிடப்படுமாம். மின்துறை அமைச்சர் ஜோன் செனிவிரட்ன கூறுகையில், “இந்த உத்தேச திட்டமானது அமைச்சரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இரவு 10 மணிக்கு மேல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஒளிபரப்பினால் 1 மில்லியன் ரூபாய் தண்டத்தொகை விதிக்கப்பட உள்ளது” என்றார். ஏற்கனவே இலத்திரனியல் ஊடகங்கள் இந்த முயற்சிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அவர்களின் விளம்பரங்களில் பெரும் பகுதி 9 – 11 மணி வரையான நேரத்தில் ஒளிபரப்பாகும் நேரத்தில் இதன் மூலம் தாம் நஷ்டம் அடையவேண்டும் எனக் கூறியுள்ளன.
அரச தொலைக்காட்சி கூட இது சாத்தியமில்லாத முயற்சி என்று கூறியுள்ளது. சிறிலங்காவின் அரச தொலைக்காட்சியான ரூபவாகினியின் தலைவர் நியூட்டன் குணரத்ன கூறுகையில், “இரவு 10 மணிக்கு மேல் ஒளிபரப்புகளை நிறுத்துவது என்பது சாத்தியம் இல்லை” என்றார்.
“சிறிலங்காவில் மக்கள் இரவு 10 மணிக்கு கண்டிப்பாக உறங்க வேண்டும் என்று நிபந்தனை விதிப்பதன் மூலம் சர்வதேச சமூகத்தில் நகைப்புக்குரிய நாடாகிவிடுவோம்" என்று தெல்சான் நிறுவன தலைவர் சான் விக்கிரமசிங்க கூறியுள்ளார்.
"இந்த நாட்டை நகைச்சுவையாளர்கள் ஆண்டு கொண்டிருக்கிறார்கள். அரசாங்கம் முதலில் இரவு கேளிக்கை விடுதிகளை இழுத்து மூடட்டும்” என்றும் அவர் சாடினார். நாட்டின் மக்கள் தொகையில் 48 விழுக்காடு மக்கள் பற்றரி மூலமே தொலைக்காட்சிகளைப் பார்க்கின்றனர். 52 விழுக்காட்டினர்தான் மின்சாரத்தை சார்ந்துள்ளனர் என்றும் சான் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டினார்.
இதேவேளையில் எதிர்கட்சியான ஐக்கியதேசியக் கட்சியும் இதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது அடிப்படை உரிமைகளை மீறுவதாக சாடியுள்ளது.
இந்த முயற்சி மூலம் அரசு தன் எதர்பார்ப்பை அடையுமா என்றால் அது நடக்கப் போவதில்லை. இம் முயற்சி இலங்கையின் பொருளாதார வளர்ச்சியில் எதர்மறையான தாக்கங்களையே ஏற்படுத்தப்போகின்றது. இதன் மூலம் முதலீட்டாளர்கள் பீதிகொண்டு நாட்டை விட்டு வெளியேறப்போவது மட்டும் உறுதி. ஏற்கனவே இனப் பிரச்சனை காரணமாக அதள பாதாளத்தில் விழ ஆரம்பித்து விட்ட இலங்கைப் பொருளாதாரம் இதன் மூலம் மேலும் ஒரு மரண அடி வாங்கப்போகின்றது.
7மறுமொழிகள்:
இப்படியும் ஒரு கூத்து அரங்கேறயிருக்கா!!!!; ரிவி யை நிறுத்தலாம். ஆனால் டெக்கை நிறுத்தமுடியாதே!
மின்சாரச்சிக்கனமானால், நாடுபூராகவும்; "பரிபூரண அமாவாசை",,, பொருத்தமாக இருக்கும்,செய்வாரா??? அவங்களும் எதைத் தின்றால் பித்தம் தணியுமெனத் தவிக்கிறார்கள்.
யோகன் பாரிஸ்
வணக்கம் மயூரேசன் ..........நல்லதொரு பதிவு........ தொடர்ந்து இப்படியான செய்தி விமர்சனங்களை தாருங்கள்....
வணக்கம் மயுரேசன்!
தாயகம் பிரிந்த எங்களுக்கு, உங்கள் விமர்சன நோக்குடனான தகவல்கள், நல்லதோர் தொடர்பாடல்
Ask them to Be careful,
Populatiom may go up?!!
:-))
ஹஹஹ உண்மையிலேயே நகைப்புக்கு உரிய செயல்தான்
பதிலிட்ட அனைவருக்கும் நன்றிகள்....
/நாட்டின் மக்கள் தொகையில் 48 விழுக்காடு மக்கள் பற்றரி மூலமே தொலைக்காட்சிகளைப் பார்க்கின்றனர்/
அது என்ன பற்றரி? காற்றாலையில் இருந்து கரண்ட் தயாரிப்பதா?
குமார்
Post a Comment
<< முகப்பு