மனித மூளையின் அலைவுக் கோலங்கள்

மனித மூளையின் அலைவுக் கோலத்தை ஆராய்ச்சியாளர்கள் நான்கு விதமாகப் வகுக்கின்றார்கள்.


1) டெல்டா நிலை 0.5-3.5
2) தீட்டா நிலை 3.5-7.0
3) அல்பா நிலை 7.0-14.0
4) பீட்டா நிலை 14.0-30.0

சரி இனி இங்குள்ள ஒவ்வொரு நிலைபற்றியும் ஒரு அலசல் போடுவோம்.

முதலாவது டெல்டா நிலை. இந்த நிலையிலேயே நாம் நல்ல தூக்கம் போடுகின்றோம். இந்த நிலையில் நம் மூளை ஆழ்ந்த அமைதியான ஓய்வை எடுத்துக்கொள்கின்றது. தொடர்ந்து மனிதன் 72 மணிநேரம் தூங்காமல் விட்டால் என்னாகும் தெரியுமா?. வேறென்ன தெய்வ ஜோதியில் கலக்க வேண்டியதுதான்.

இரண்டாவது தீட்டா நிலை. இதுவே மனிதனிற்கு புத்தாக்கத்தை தூண்டும் நிலையாகும். இதற்கு உதாரணங்களை அடுக்கிக்கொண்டேபோகலாம்.


நியூட்டன் புவியீர்ப்பு பற்றி கண்டு பிடித்தது எப்படி?. ஒரு நாள் அவர் அப்பிள் மரத்தின் கீழ் ஓய்வெடுத்துக்கொண்டு இருந்தபோது ஒரு அப்பிள் நிலத்திலே “டப்” என்று வீழ்ந்தது. அரைத்தூக்கத்தில் இருந்த சேர் ஐசாக் நியூட்டன் விழித்துக் கொண்டார். ஏன் அப்பிள் மேலே போகாமல் கீழே வீழ்ந்தது என்று யோசிக்க தொடங்கினார். முழு விழிப்பில் இருந்திருந்தால் கட்டாயம் அந்த அப்பிளை சாப்பிட்டு இருப்பார். ஆனால் அவர் அவ்வாறு செய்யாமல் நீண்ட யோசனையில் ஈடுபட்டார். அன்றய அந்த அப்பிளே பூமியின் புவியீர்ப்பு சக்தி பற்றி உலகம் அறிய வழி வகுத்தது.

இதைவிட ஒரு நாள் மென்டலீவ் அரைத்தூக்கத்தில் ஒரு கனவு கண்டார் அதில் பந்துகள் ஒரு அட்டவணையில் வீழ்கின்றன. ஒவ்வோரு பந்தும் இலக்கமிடப்பட்டுள்ளது. இப்போது விழித்துக்கொண்ட மென்டலீவ் ஓடிச்சென்று மூலகங்களை அணு எண் வரிசைப்படி அட்டவணைப் படுத்த தொடங்கினார். அடடா என்ன ஆச்சர்யம் ஒத்த குணமுள்ள மூலகங்கள் எல்லாம் ஒரு நிரலில் வந்து இருந்தது.

உலகின் மிகப் பெரிய கலைஞனான மைக்கல் ஆஞ்சலோ கூறுகின்றார் தான் வரையும் ஓவியங்களேல்லாம் காலையில் அரைத்தூக்கதில் கண்டவையே!

மூண்றாவது அல்பா நிலை அதாவது நீங்கள் விழித்து உள்ளீர்கள் ஆனால் நீங்கள் பதட்டம் இல்லாமல் இருக்கின்றீர்கள். உதாரணமாக காலையில் வேலைக்கு சென்றவுடன் எப்படி இருக்கும் யோசித்துப் பாருங்கள். அதுதான் அல்பா நிலை. வினைத்திறனுடன் உற்பத்தியை மேற்கொள்ளக் கூடிய நிலை. இந்து நிலை பொருளாதார முக்கியத்துவமுடைய நிலையாகக் கொள்ளப் படுகின்றது

நான்காவது பீட்டா நிலை இது மிகவும் ஆபத்தான நிலை. இந்த நிலை தெடர நாம் அனுமதிக்க கூடாது. காரணம் உங்களை மன நோயாளி ஆக்குவது இந்த நிலைக்கு நீங்கள் வரும்போதே ஆகும். அதிகளவான மன அழுத்தம் உங்களை இந்த நிலைக்கு இட்டுச் செல்லும். அதிக மன உளைச்சல்லுக்குட்பட்டு நீங்கள் இருந்தாலும் பெரும்பாலானவர்கள் பரபரப்பாக இருப்பார்கள் என்பது ஆராய்ச்சியாளர்களின் கருத்து.

இதற்கு ஒரு உதாரணமாக இலங்கையில் நடைபெற்ற ஒரு நிகழ்வைக் கூறலாம் என்று நினைக்கின்றேன். கொழும்பு இராஜகிரிய பகுதியில் ஒரு ஐந்து வயதுப் பாலகனை அவனது தாயார் கொழும்பு றோயல் கல்லூரியில் சேர்த்துவிட வேண்டும் எனக் கனவு காண்கின்றாள். ஆனால் பாவம் அந்தத் தாயின் கனவு மண்ணோடு மண்ணாகிவிடுகின்றது.

சற்றும் மனம் தளராத தாய் தன் மகனை ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தயாராக்குகின்றாள். இந்த பரீட்சையை அதிகூடிய புள்ளிகளுடன் சித்தி எய்த வைத்து அவனை றோயல் கல்லூரியில் சேர்க வேண்டும் என்பதே அந்த தாயின் எண்ணம்.


ஆயினும் ஐந்து வயதுப் பையன் தன்வயதுப் பையன்கள் வீதியில் கிரிகட் விளையாடுவதைப் பார்க்கின்றான், வகுப்பில் ஏனையவர்கள் நேற்று ஜய சூர்யா அடித்த சதத்தைப் பற்றி பேசுகின்றார்கள். பாவம் இவனுக்கு இதில் பங்கெடுக்க தாயின் அனுமதியில்லை. பிஞ்சு மனம் தனியே கிடந்து தவிக்கின்றது. காலை முதல் மாலை வரை படிப்பு படிப்பு படிப்பு. ஒரு நாள் இரவு 11 மணியளவில் மகனின் அறைக்குள் தாய் நுழைந்த போது மகன் கட்டிலில் இருந்தவாறே எதையே விறைத்துப் பார்த்துக் கொண்டு இருந்தான். தாய் எவ்வளவோ பேசியும் அவனிடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை.

இப்போ அந்த சிறுவனுக்கு 12 வயது முல்லேரியா மனநோயாளிகள் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றான். வைத்தியரின் கூற்றுப்படி சுமார் இரண்டு வருடங்களில் அவன் இப்போது இருக்கும் நிலையில் இருந்து மீளலாம் என்று குறிப்பிட்டார்.

மனித மூளை ஒரு அபூர்வமான படைப்பு அதை முறையாகப் பயன்படுத்த வேண்டும். குறிப்பாக சிறுவர்களை மன அழுத்தத்திற்கு உட்பட விடக்கூடாது. அளவிற்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சுதானே????

17மறுமொழிகள்:

Blogger Prabu Raja மொழிந்தது...

கட்டுரை பயனுள்ளதாக உள்ளது. இது போல அறிவியல் விஷயம் உங்களிடம் நிறைய தேறும் போல தெரிகிறதே!

சொன்னால் நாங்களும் தெரிந்து கொள்வோம்.

6:32 pm  
Anonymous Anonymous மொழிந்தது...

Nice one.
Have linked this in Desipundit.

http://www.desipundit.com/2006/07/04/moolai/

9:15 pm  
Blogger Jay மொழிந்தது...

பிரபுராஜா டுபுக்கு இருவருக்கும் நன்றி.
வெளி இணைப்பு கொடுத்த டுபுக்கு விற்கு இரட்டை நன்றி...
இவை அனைத்தும் தலைமத்துவம் எனும் தலைப்பிலான பாடத்தில் நம்ம பேராசிரியர் கற்பித்தது. அருமையாக விளங்கியதால் மற்றவருடன் பகிர்ந்து கொண்டேன்......

11:46 am  
Blogger கானா பிரபா மொழிந்தது...

வணக்கம் மயூரேசன்

வித்தியாசமான, அறிவியற் பதிவுகளைத் தொடர்ந்து நீங்கள் தருவதையிட்டு மகிழ்ச்சி

11:57 am  
Blogger ரவி மொழிந்தது...

அருமையாக எழுதி இருக்கிறீர் மயூரேசன்...

அப்படியே ஒரு பிரின்ட் எடுத்து ஏதாவது வார இதழுக்கு அனுப்புங்க...

கண்டிப்பாக வெளியாகும்..

12:05 pm  
Blogger Jay மொழிந்தது...

கானா பிரபா மற்றும் செந்தழல் ரவி இருவருக்கும் நன்றி.
உங்களைப் பேன்ற நட்சத்திர வலைப் பதிவாளர்கள் இந்த அடியேனின் சிறிய வலைப் பதிவுகளிற்கு பின்னூட்டம் இட்டமைக்கு நன்றிகள்.

12:32 pm  
Blogger ரவி மொழிந்தது...

என்ன மயூர் இப்படி சொல்லிட்டீங்க...நீங்களும் நட்சத்திரம்தான்...

உங்களிடம் இருந்து பல சிறந்த பதிவுகளை எதிர்பார்த்து காத்து இருக்கும் செந்தழல் ரவி

12:41 pm  
Blogger Jay மொழிந்தது...

நன்றி செந்தளல் ரவி....
உங்கள் அன்புக்க நன்றி........

4:14 pm  
Anonymous Anonymous மொழிந்தது...

மயூரேசன்!
விஞ்ஞானத் தகவல்களைப் பொருத்தமான நடைமுறை உதாரணங்களுடன் விளக்கும் போது; அதைச் சாதாரணமானவர்களும்; புரியத் தடையிருப்பதில்லை. நீங்கள் அறிந்ததை பகிருங்கள். அந்தப் பையனுக்கு நடந்த கதி; இன்னும் பலருக்கு நடந்து கொண்டிருப்பது வேதனையான உண்மை!
யோகன் பாரிஸ்

4:59 pm  
Blogger Suban மொழிந்தது...

மயூரேசன் உங்களின் இக்கட்டுரை பயனுள்ளதாக உள்ளது

10:36 pm  
Blogger Chandravathanaa மொழிந்தது...

அருமையான விளக்கத்துடனான பயனுள்ள பதிவு

10:09 am  
Blogger Jay மொழிந்தது...

யோகன் பாரிஸ் சுபன் சந்திரவதனா!
உங்கள் பின்னூட்டலுக்கு நன்றிகள்...
அறிவயல் சார்கட்டுரைகளுக்கு இவ்வளவு தேவை இருக்குமென்று நான் நினைக்கவில்லை.
உங்கள் அனைவரது அன்புக்கு நன்றி.. மேலும் மேலும் என்னால் இயன்ற அறிவியல் (விஞ்ஞாணம்) கட்டுரைகளை எழுதுகின்றேன்......

5:46 pm  
Blogger மலைநாடான் மொழிந்தது...

மயூரேசன்!

நீங்கள் குறிப்பிட்டுள்ள இந்த அலைவரிசை அளவின் அடிப்படையிலேயே தியானம், ஆழ்நிலைத்தியானம் என்பன அமைந்துள்ளது. ஆக்கபூர்மான விடயங்களை எழுதி வருகின்றீர்கள் பாராட்டுக்கள்.
தொடர்ந்து எழுதுங்கள்.

9:07 pm  
Blogger G.Ragavan மொழிந்தது...

பிஞ்சு உள்ளங்களை அழுத்தக் கூடாது. கொஞ்சு உள்ளங்களாக வைத்திருக்க வேண்டிய உள்ளங்களை நம்மை நோக்கி அஞ்சு உள்ளங்களாக மாற்றினால் பிஞ்சு உள்ளங்கள் பிஞ்சு உள்ளங்களாகப் போகும். சரிதானா?

9:44 pm  
Blogger Jay மொழிந்தது...

மலைநாடான் அவர்களே நீங்கள் சொல்வது சரிதான்...... ஆழ்த தியான நிலையில் எமது சிந்தனை ஆற்றல் தூண்டிவிடப் படுகின்றது....
இராகவன் அண்ணா நீங்கள் சொன்னதும் சரிதான். பிஞ்சு உள்ளங்களை நசுக்க கூடாது......

11:24 am  
Blogger கதிர் மொழிந்தது...

நல்ல கட்டுரை மயூரேசன்!!
தொடருங்கள் உங்கள் பயணத்தை

அன்புடன்
கதிர்

12:45 am  
Blogger Jay மொழிந்தது...

//நல்ல கட்டுரை மயூரேசன்!!
தொடருங்கள் உங்கள் பயணத்தை//

கதிர் அவர்களே நன்றி என் எழுத்துப்பயணம் தொடரும்....

10:09 am  

Post a Comment

<< முகப்பு