வடை சுட்டது பாட்டியா? வடையைச் சுட்டது பாட்டியா?

ஒரு அழகான காலை நேரம். கிழ் வானிலே சூரியன் உதிக்கத் தொடங்கினான். அடுத்த சில மணித்துளிகளில் பூமி தனது ஆதிக்கத்தில் வரப்போவதை அறிந்த கதிரவன் சற்று ஆணவமாகவே வெப்பக் கதிர்களைப் பரப்பினான். எங்கோ தூரத்திலே தடக் தடக்…… தடக் தடக்……. என இரயில் வண்டி சென்றுகொண்டு இருந்தது. அனைவரும் காலை நேரத்தில் சுறு சுறுப்பாக இயங்கத் தொடங்கிவிட்டனர். வண்டுகள் ரீங்காரமிடத் தொடங்கிவிட்டன. குயில்கள் பாடத் தொடங்கிவிட்டன. மொட்டுக்கள் மலர்ந்து பூவாக புணர் ஜென்மம் எடுத்துவிட்டன. புல்லின நுனியில் இருந்த பனித்துளிகள் கூட தம்மை சிலிர்த்துக்கொண்டன.

இத்தனைக்கும் மத்தியில் இராஜ பாட்டை வீதியால் செல்பவர்களிற்கு 4 ம் இலக்க வீட்டிலிருந்து வரும் வடைவாசனையை நுகராமல் செல்லவே முடியவில்லை. என்ன உங்களிற்கும் மணக்கிறதா அந்த உழுந்து வடை?. வாங்கோ உள்ளுக்க போவம்.

அங்கே ஒரு காக்கா வடை சுட்டுக்கொண்டு இருந்தது. அந்த காக்கா வடைசுடும் விதமோ அப்பப்பா என்ன ஒரு அலாதி......

உழுந்து கலவையை கையில் எடுத்து அதில் இலாவகமாக ஒரு ஓட்டைபோட்டு எண்ணெயில் விட்டு எறிந்தார்.

“சு.....” வடை பொரியும் சத்தம் சுண்டியிழுத்தது எம்மை மட்டுமல்ல அப்பப்ப காக்காவின் வடையை சூறையாடும் ஒருவருக்கும் தான்.

4 ம் இலக்க வீட்டு கூரையிலே அப்போது ஒரு சத்தம் “தொம்.........”. காக்காவிற்கு புரிந்து விட்டது வந்திருப்து யாரென்று. தனகு கரிய சிறகுகளை பட பட என அடித்தவாறு கரையத் தொடங்கியது.

கூரை மேல் இருந்தது யார் எனத் தெரியுமா அதுதாங்க கள்ளப் பாட்டி. அப்போது கூரை மேலிருந்த பாட்டி சடார் எனப் பாய்ந்து போய் 5 ம் இலக்க வீட்டு கூரையின் மேல் அமர்ந்து கொண்டார்.

பாட்டி சென்று விட்டதாக நினைத்த காக்காவும் சந்தோசமாக கவலையில்லாமல் நீராடச் சென்றுவிட்டது. இந்த சந்தர்ப்பத்தை பயன் படுத்திய பாட்டி குய்................ எனப் பாய்ந்து வந்து காக்காவின் வடையை திருடிக் கொண்டு போய்விட்டா.

நீண்ட நேரம் பாய்ந்து பாய்ந்து போன பாட்டி களைப்படைந்து விடவே தன் வாயிலிருக்கும் வடையை சாப்பிட எண்ணினார். அப்போதுதான் பாட்டியுடன் சனி விளையாடத் தொடங்கியது.

அந்த வழியால் ஒரு கழுதை வந்தது. பத்து நாளாக சாப்பிடாமல் பஞ்சத்தில் அடிபட்டிருந்த குள்ளக் கழுதை அது. பாட்டியின வாயிலிருக்கும் வடையை எப்படியாவது கவருவது என்று தீர்மாணித்துக் கொண்டது.

“பாட்டி பாட்டி எங்க ஒரு பாட்டு ஒண்டு பாடு பாக்கலாம்” கழுதை கேட்டது

நீண்ட நேர யோசனையின் பின்பு பாட்டி தனது பொக்கை வாயினுள் வடையை அடைந்து சாப்பிடத் தொடங்கினார். பின்பு ஒரு ஏப்பம் விட்டவாறே பாடத்தொடங்கினார்..........

“கண்ணும் கண்ணும் நோக்கியா!
நீ கொள்ளை கொள்ளும் மாபியா
உனக்கு தேவை வடையா
போடாங் கொய்யா....”

வடையை பெற்றுக் கொள்ள முடியாமல் போன கழுதை அசடு வழிந்தவாறே நம்ம வடிவேல் பாணியில் கூறியது.
“இந்த வயசிலயும் இப்பிடி சிமாட்டா பதில் சொல்லுறியே நீயு
உண்மையிலேயே சுப்பர் கிரானிதான்”
வாடிய முகத்துடன் அந்த இடத்தைவிட்டு கழுதை நகர்ந்தது. பாட்டி சந்தோசத்துடன் காதல் யானை வருகுது ரெமோ பாடலை வாயினுள முணு முணுத்தவாறே மீண்டும் பாய்ந்து பாய்ந்து சென்றார்.




கதை சொல்லும் தத்துவம் : அந்நியன் திரைப்படம் பார்த்தால் வடையை மற்றவர்களிடம் இருந்து காப்பாற்றலாம்.

9மறுமொழிகள்:

Anonymous Anonymous மொழிந்தது...

யோவ் என்னய்யா விளையாட்டிது.
சின்னப் பசங்கள கெடுக்கிறதா முடிவா?

5:46 pm  
Blogger Jay மொழிந்தது...

//யோவ் என்னய்யா விளையாட்டிது.
சின்னப் பசங்கள கெடுக்கிறதா முடிவா?//



இரசிச்சீங்கல்ல.....
அது போதும் சின்ன பசங்க கிட்ட காட்டாதீங்க.....

10:11 am  
Anonymous Anonymous மொழிந்தது...

do v have to read inbetween the lines?..

Krish

11:06 am  
Blogger Jay மொழிந்தது...

hello krish!
I didn't follow you. Wat are you trying to tell me..?? wat line????

5:32 pm  
Blogger நன்மனம் மொழிந்தது...

//do v have to read inbetween the lines?..//

//Wat are you trying to tell me..?? wat line???? //

ஆகா கிளம்பிட்டாங்கய்யா.... கிளம்பிட்டாங்கய்யா. குத்தாம விட மாட்டங்க போல இருக்கே!!!!

மயூரேசன் நெசமா தெரியாம கேக்கறீங்களா இல்ல போட்டு வாங்கறதா:-)

5:36 pm  
Blogger G.Ragavan மொழிந்தது...

ம்ம்ம்...என்னவோ நடக்குது. மர்மமாய் இருக்குது...கண்டுபிடிக்கிறேன். அந்த இடத்துல நண்டு பிடிக்கிறேன்.

5:50 pm  
Blogger Jay மொழிந்தது...

ஆகா!
என்னப்பா மாறி மாறி இப்படி பயமுறுத்தறீங்க...
கிறிஸ் படம் ரேஞ்சுக்கு கதை எழுதினா இப்படியா கடிக்கிறது......
ஒரு நாளைக்கு இந்த கதை கூட திரைப்படமாகலாம். தமிழில் அந்தளவு தட்டுப்பாடு கதைகளிற்கு........

5:53 pm  
Anonymous Anonymous மொழிந்தது...

மயூரேசா!
இந்தச் "சுட்டது";
கதையைச் சுட்டது;பாட்டைச் சுட்டது;இசையைச் சுட்டது; கலரைக் சுட்டது; இப்போ வடையைச் சுட்டதில நிக்குது.
நடத்துங்க!
யோகன் பாரிஸ்

5:58 pm  
Blogger Jay மொழிந்தது...

//இந்தச் "சுட்டது";
கதையைச் சுட்டது;பாட்டைச் சுட்டது;இசையைச் சுட்டது; கலரைக் சுட்டது; இப்போ வடையைச் சுட்டதில நிக்குது//

இத்தனை விசயங்களை சுட்டுவிட்டேனா சாமி?????? ;-)

9:25 am  

Post a Comment

<< முகப்பு