இலங்கையின் இலவசக் கல்வித்திட்டம்

கிறிஸ்தோபர் வில்லியம் விஜயகோன் கன்னங்கரா இலங்கையின் கல்வித்துறையின் தந்தையாக வர்ணிக்கப்படுகின்றார். இவரே இலங்கையில் இலவசக் கல்வித்திட்டம் அறிமுகப்படுத்தப்பட காரணமாக அமைந்தார். இவர் அக்டோபர் 14, 1884 ல் பிறந்தார். இவர் அம்பலாங்கொடை வெஸ்லி ஆங்கில உயர் பாடசாலையிலும் பின்பு காலி றிச்மன்ட் கல்லூரியிலும் கல்விபயின்றார். பின்னர் இவர் ஆசிரியராக மொரட்டுவை பிரின்ஸ் ஆப் வேல்ஸ் கல்லூரி போன்ற பாடசாலைகளில் கடமையாற்றினார். சட்டத்துறையில் தகுதிபெற்ற இவர் பின்பு காலியில் சட்டத்தரணியாகக் கடமையாற்றினார். 1919 ல் அரசியலில் நுழைந்து கொண்டார். செப்டெம்பர் 29, 1969 ல் இறைவனடி சோர்ந்தார்.

இதை நான் எழுதக்காரணம் இன்று இலங்கையின் கல்வியறிவு இத்தனை பிரைச்சனைக்கு மத்தியிலும் 90 விழுக்காடாக இருப்பதற்கு இவர் செய்த தூரநோக்கான முயற்சியே காரணமாகும். இன்று பாடசாலைமுதல் பல்கலைக்கழகம் வரை இலவசமாக கல்வி வழங்கப்படுகின்றது.

இலவச கல்விக்கு எதிர்ப்பு கருத்துகளும் கொழும்பைத் தளமாக கொண்டு எழுந்துள்ளதைக் கூறலாம். இதன் விழைவாக கடந்து போன அரசு ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியை அமைக்கப்போய் பின்பு அது பெரிய அரசியல் விடயதானமாகி பின்பு அந்த முயற்சி கைவிடப்பட்டது.

ஒருவர் வெளிநாடு சென்று உயர்கல்வி பெறுவதற்காக செலவிடும் பணத்தை இலங்கையிலேயே செலவிட்டால் இலங்கையின் வெளிநாட்டு நாணயம் சேமிக்கப்படும் என்பதே அவர்களின் வாதம். ஆயினும் பின்னர் தனியார் கல்லூரிகள் அரச பல்கலைக்கழகங்களை விட வினைத்திறனாக தொழிற்பட்டுவிடுமோ என்ற பயத்தில் நம்மைப்போன்ற பல்கலைக்கழக மாணவர்கள் கடும் வெயிலிலும் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் ஆர்ப்பாட்டம் செய்தோம். ஏற்கனவே தனியார் பாடசாலைகள் இலங்கையில் வினைத்திறனுடன் இயங்க ஆரம்பித்து விட்டமையையும் இங்கு கூறவேண்டும்.

இங்கே இத்தனைக்கும் மத்தியில் சில நிறுவனங்கள் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களின் பட்டப்படிப்புகளை தாம் கற்பிக்கின்றன. இவை தம்மை நிறுவனங்களாக காட்டிக்கொள்வதுடன் கல்லூரிகளாகக் காட்டிக்கொள்வதில்லை. இதற்கு இலங்கைச் சட்டம் அனுமதிக்கின்றது. பெங்களூர், அமேரிக்கா, லண்டன் என நீங்கள் படிக்கப்போகும் பல்கலை பட்டியல் நீள்கின்றது. இவற்றை அப்போ என்ன செய்வார்கள். இதைவிட தனியார் கல்லூரிகளை அனுமதிக்கலாம் தானே?

இந்தியா, சிங்கப்பூரில் தனியார் கல்வி நிறுவனங்கள் ஆற்றிய ஆற்றும் பணியையும் குறைத்து மதிப்பிட முடியாது. இதை இலங்கை அரசியல் வாதிகளும் புரிந்துகொள்ள வேண்டும்.

எது எதுவாயினும் தூரநோக்கற்ற இலங்கை அரசியல்வாதிகளிடையே கன்னங்கரா போன்ற ஒருவர் கிடைத்தமை இலங்கையரின் அதிட்டமே!

3மறுமொழிகள்:

Anonymous Anonymous மொழிந்தது...

விரைவில் இலங்கை மக்கள் சந்தோசமாக வாழ்வார்கள் என்று நம்புவோமாக...
குமரன்

11:41 AM  
Blogger Maniy மொழிந்தது...

The question about allowing private institution in SL is very serious and complex. It is hard to predict the outcome. While there is the fear of these private institutions shadowing the government univerisities, people can argue we need a good competition and people should have a the right to choose whatever they want.

It's like the medical system in Canada. It's government managed resulting long delays for specialist treatments. Some argue that it shoud be made private so that people can trade off between money and time themselves.

In anycase, SLankan educational syste has to be very much upgraded to follow the world wide standard. When I was there, it was not a semester-based system. After they have introduced it, but I don't know yet how much it is implemented now. We have to agree that we still don't have a proper higher educational system, so students looking for graduate studies have to go abroad and the problem they (myself included) face is nobody knows about Sri Lankan universities and their standards. Sri Lankan educational ministry has to work on advertising its educational system in other countries as well.

8:13 PM  
Blogger Mayooresan மொழிந்தது...

நன்றி குமரன் மற்றும் சின்னத்தான் (மணி) உங்கள் கருத்துக்கள் சரியானதே. இப்போது இங்கு செமெஸ்டர் முறைதான் உள்ளது. எமக்கு ஜி பி ஏ எனும் முறை தேர்ச்சியை அளவிடப் பயன்படுகின்றது. இலங்கையைப் பற்றியே பலருக்கு தெரியவில்லை பின்பு எங்கே இந்த நாட்டடின் பல்கலைக்கழகம் பற்றி தெரியப்போகின்றது.

4:54 PM  

Post a Comment

இந்த இடுகைக்கு தொடுப்புகள்:

Create a Link

<< முகப்பு