.net பிறந்த கதை


ஆரம்பக் காலகட்டத்தில் நிரலாளர்களிற்கு இயங்கு தளங்கள் பல இருக்காததால் பிரைச்சனை இருக்க வில்லை. தன் பாட்டிற்கு தமக்கு தேவையான இயங்கு தளத்திற்கு நிரல்களை எழுதினார்கள். இணையத்தின் பரவலால் அனைத்து தளங்களிலும் இயங்க கூடிய நிரல்கள் எழுதப்பட வேண்டிய தேவை ஏற்பட்டது. உதாரணமாக வின்டோஸ், லினக்ஸ், சொலாரிஸ், மக் ஓ ஸ் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

இணையம் உலகில் ஆதிக்கம் செலுத்த தொடங்கியதில் இருந்து நிரலாளர்கள் (Programmers) இரண்டு அணியில் பிரிந்து கொண்டனர்.

1. வின்டோஸ் சார் நிரலாளர்கள்
2. ஏனைய இயங்கு தளம் சார் நிரலாளர்கள்


தொன்னூறுகளில் சன் மைக்ரோ சிஸ்டம் இந்தப் பிரைச்சனையை வெற்றிகரமாக அணுகியது. இதன்போது யாவா எனும் மொழி அறிமுகப் படுத்தப்பட்டது. ஜாவாவின் சிறப்பே அனைத்து இயங்கு தளங்களிலும் இயங்கக் கூடிய தன்மையாகும்.

யாவாவின் அதீத வளர்ச்சி வழமை போல மைக்ரோசாஃப்ட்டை கலங்கடித்தது. மென்பொருள் உலகின் முடிசூடா மன்னன் யாவாவை விழ்த்த தன் வழமையான தந்திரத்தைக் கையாண்டது. அதுதாங்க எதிரியின் பலத்தையே தன்பலமாக மாற்றுதல். அப்பட்டமாகச் சொன்னால் காப்பி அடித்தல்.

1998 ல் மைக்ரோசாப்ட் Programming Architecture ஐ இரகசியமாகத் தயாரிக்கத் தொடங்கியது. பிற்காலத்தில் இது NGWS (Next Generation Windows Service) எனப் பெயரிடப் பட்டது. முயற்சிகள் யாவும் இரகசியமாகவே நடைபெற்றன. தற்போது இந்த NGWS ஐ .net எனப் பெயரிட்டுள்ளனர். 2000 ஜுலை யில் மைக்ரோசாப்ட் .நெட் பற்றி உத்தியோக பூர்வமாக அறிவித்தது.

.நெட்டில் யாவாவைப் (யாவாவில் இன்டபிரிடர் முறை பயன் படுகின்றது) போலல்லாமல் கம்பைலர் பயன் படுகின்றது இதனால் .நெட் செயலிகள் யாவா செயலிகளைவிட வினைத்திறனாக செயற்படக் கூடியன. இதைவிட யாவாவைப் போல சிறப்பாக நினைவக முகாமைத்துவத்தைச் (Memory Management) செய்கின்றன.

யாவாவின் (JVM) Java Virtual Machine போல .net செயலிகள் இயங்க .நெட் ஃபிரேம்வேர்க் தேவைப்படும். இது மைக்ரோசாப்டின் தளத்தில் இலவசமாக இறக்கிக் கொள்ளலாம்.

.net ஃபிரேம்வேர்க் இயங்கு தளத்திற்கும் செயலிக்கும் இடையில் ஒரு ஊடகமாக தொழிற்படுகின்றது. அதாவது நினையுங்கள் உங்களுக்கு தமிழ் தெரியும் ஆனால் சிங்களம் தெரியாது. உங்கள் சிங்கள நண்பனுடன் பேச என்ன செய்வீர்கள். ஒரு மொழி பெயர்ப்பாளர் தேவை. அந்த மொழி பெயர்ப்பாளர் நீங்கள் பேசும் தமிழை சிங்களத்திற்கும் நண்பன் பேசும் சிங்களத்தை தமிழுக்கும் மொழிபெயர்ப்பான். .net ஃபிரேம்வேர்க்கும் இதையே செய்கின்றது.

இங்கு முக்கியமான பிரைச்சனை ஒன்று இருக்கின்றது. சோர்ஸ் கோடை மீள பெறுவது இலகுவானது ஆகும். அதாவது நிரலாளரால் வழங்கப்படும் இடைநிலை பயிலை மீள சோர்ஸ் கோடாக மாற்றிக் கொள்ளலாம் (Reverse Engineering) இதனால் பதிப்புரிமைப் பிரைச்சனை ஏற்படுகின்றது.

.net Framework பதிப்புகள்
• பீட்டா பதிப்பு நவம்பர் 2000
• 1.0 ஜனவரி 2002
• 1.1 ஏப்ரல் 2003
• 2.0 2005

விசுவல் ஸ்டூடியோ .net பதிப்புகள்
• பீட்டா பதிப்பு நவம்பர் 2000
• VS.NET 2002 பெப்ரவாரி 2002
• VS.NET 2003 ஏப்ரல் 2003
• VS.NET 2005

4மறுமொழிகள்:

Blogger பிரதீப் மொழிந்தது...

அடடே மயூரேசா,
டெக்னிகல் பதிவுகளும் போட்டுத் தாக்குகிறாயே... வாழ்க!
.நெட் பற்றி நீ சொன்ன்து உண்மை. ஜாவாவும் பல தளங்களிலும் சத்தம் போடாமல் ஓடுவதற்கு அதன் பிரத்தியேகத் தளம் - ஜாவா வெர்ச்சுவல் மிஷின் தேவைப்படும். விண்டோஸில் ஜாவா நிரல்கள் ஓட்டுவதற்கு எல்லோரும் வெர்ச்சுவல் மிஷின் எழுதத் துவங்கினார்கள், கடைசியில் மைக்ரோசாப்டே தனது சொந்த வெர்ச்சுவல் மிஷின் எழுதும் நிலைக்குத் தள்ளப் பட்டது.

எப்படி ஜாவா விண்டோஸைப் பிடிக்க விண்டோஸைப் பயன்படுத்திற்றோ, அதே பாணியில் இப்போது விண்டோஸ் திருப்பித் தாக்குகிறது. :)

7:42 pm  
Blogger Jay மொழிந்தது...

அறிவியல் கட்டுரைகளுக்கு அதிகம் தேடல் இருப்பதால் தான் இந்த விபரீத முயற்சிகள்.
மைக்ரோஃசாப்டின் மதுரைக் கவியாரே வருக வருக!
மைக்ரோசாப்ட் செய்தது செய்வது செய்யப்போவது எல்லாம் சரி என்கிறீர்களா?

4:13 pm  
Blogger ரங்கா - Ranga மொழிந்தது...

மயூரேசன்,

அழகாகவும் சுருக்கமாகவும் எழுதியிருக்கிறீர்கள். விஷுவல் ஸ்டூடியோவில், மொழி பெயர்ப்பு வசதிகளும் வந்திருக்கின்றன என்றும், கட்டளைப் பட்டியல்களை நிர்மாணித்துவிட்டு ஆங்கிலமோ, பிரஞ்ச்சோ தேவை என்று சொன்னால், தானாகவே மொழிபெயர்த்து செயலி அந்தந்த மொழியில் காட்டி விடுகிறது என்றும் கேள்விப்பட்டேன். கொஞ்சம் விளக்க முடியுமா?

ரங்கா.

5:55 pm  
Blogger Jay மொழிந்தது...

ரங்கா மன்னிக்கவும் தெரியவில்லை!
தற்போது தான் வி பி .நெட் கற்க ஆரம்பித்திருக்கின்றேன். தெரிந்தால் சொல்கின்றேன். மன்னிக்கவும்

4:57 pm  

Post a Comment

<< முகப்பு