திருகோணமலை அதிர்கின்றது

சிங்கள இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள மூதூர் நகர் தமிழீழ விடுதலைப் புலிகளின் முழுக் கட்டுப்பாட்டுக்குள் வந்து கொண்டிருக்கின்றது.


திருகோணமலை பிரதேசத்தில் இன்று புதன்கிழமை அதிகாலை 2 மணி முதல் தொடர்ச்சியாக இச்சமர் நடைபெற்று வருகிறது.

திருகோணமலை துறைமுகப் பிரதேசத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மூதூர் இறங்குதுறையைக் கைப்பற்றிய விடுதலைப் புலிகள் அதனைத் தொடர்ந்து முன்னேறினர்.



தமிழீழ விடுதலைப் புலிகளின் சம்பூர் முன்னரங்க காவல் நிலைகளிலிருந்து 800 மீற்றர் தொலைவில் உள்ள சிங்கள இராணுவத்தின கட்டைப்பறிச்சான் மற்றும் பலாத்தோப்பு, பச்சானூர் ஆகிய முகாம்கள் தகர்க்கப்பட்டு சிங்கள இராணுவத்தினர் ஓட ஓட விரட்டியடிக்கப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து காந்திநகர், பலாத்தோப்பு, தோப்பூர், செல்வநகர் ஆகிய சிங்கள இராணுவ ஆக்கிரமிப்பில் இருந்த மூதூர் பகுதிகளை தமிழீழ விடுதலைப் புலிகள் மீட்டனர்.

தற்போது மகிந்தபுரம் பகுதியில் மோதல் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதியான சம்பூரில் சிங்கள விமானப் படையின் கிபீர் ஜெட் விமானங்கள் குண்டு வீசி வருகின்றன.

மேலும் மாவிலாறு அணைக்கட்டை ஆக்கிரமிப்பதற்காக கல்லாறு பகுதியில் நடத்தி வந்த மோதலை சிங்கள இராணுவம் கைவிட்டுள்ளது என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

திருமலை சமரினால் திருகோணமலை துறைமுகத்தில் உள்ள சிறிலங்கா பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு சொந்தமான எண்ணெய் கிடங்குகள் மற்றும் இந்திய பெற்றோலிய நிறுவனத்திடம் தற்போதும் கைவசம் உள்ள எண்ணெய்க் குதங்கள் ஆகியவற்றுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்று சிறிலங்கா பெற்றோலியத்துறை அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி தெரிவித்துள்ளார்.

Thanks : Puthinam.com

2மறுமொழிகள்:

Blogger வன்னியன் மொழிந்தது...

புலிகள் எல்லோருக்கும் சேர்த்து ஆப்பு வைத்துவிட்டார்கள்.
"இது முன்னேற்ற முயற்சியில்லை, மாவிலாறு மீதான சிங்கள அரசின் முன்னேற்ற முயற்சிக்குரிய வினியோகங்களைத் தடுப்பதே நோக்கம்" என்று சொல்லிவிட்டார்கள்.
அதாவது தற்காப்புத்தாக்குதல்தான் என்று சொல்லிவிட்டார்கள். எனவே மேலதிக நிலமீட்போ வலிந்த சண்டைகளோ புலிகளிடமிருந்து இப்போதைக்கு இல்லை.

இருதரப்புமே தாம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை முறிக்கவில்லையென்பதைக் காட்டுவதற்கு பிரயத்தன முயற்சிகள் எடுக்கிறார்கள்.
ஊடகங்களும் வலைப்பதிவர்களும் அதிகம் உணர்ச்சிவசப்பட்டுவிட்டார்கள். இன்னும் ஊடகங்களில் மூதூர் கைப்பற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது என்றுதான் முதன்மைச் செய்திகள் உள்ளன.

இப்போதுள்ள புலிகளின் கூற்றுப்படி, நிலத்தைக் கைப்பற்றாமல் வேறு எந்தத் தாக்குதலும் எங்கும் நடத்தப்படலாம், வினியோகத் தடுப்பு என்ற பேரில்.

6:30 pm  
Blogger Jay மொழிந்தது...

//வன்னியன்//
இதைத்தான் சொல்வார்கள் பொல்லைக் கொடுத்து அடியும் வாங்குவது என்று!!

//கலாநிதி//
எனது பெற்றோர்கள் திருமலையிலேயே உள்ளனர். நகரில் கடும் பதட்டம் நிலவினாலும் நிலமை மோசமில்லை. ஆனால் இராணுவம் மற்றும் புலிகள் பரிமாறிக் கொள்ளும் எறிகணைகளால் நகரம் அதிர்கின்றது. அம்மாவுடன் பேசும் போது எறிகணைச்சத்தங்கள் தொலைபேசியினூடாகவே மோசமாக கேட்டது.

12:58 pm  

Post a Comment

<< முகப்பு