கணணி ஆணா? பெண்ணா?
அண்மையில் என் நண்பனைக் கண்ட போது அவனிடம் சாதாரணமாக கேட்டேன். "டேய் மச்சான்! கம்பியூட்டர் ஆணா? பெண்ணா?".
சிறிது நேரம் யோசித்தபின் அவன் சொன்னான். "அது பெண்ணடா மச்சி"
எனக்கு தலைகால் புரியாத கோவம். இப்படி ஒரு வினைத்திறன் மிக்க இயந்திரத்ததை பெண் என்று கூறுவதா???
அப்போ அவன் என் ஆதங்கத்ததைப் புரிந்து கொண்டு அதற்கான காரணத்தைக் கூறினான்
- இதனுடன் பழக ஆரம்பிப்பது கடினம் ஆரம்பித்து விட்டால் நிறுத்த முடியாது
- இது பல பிரைச்சனைகளைத் தீர்க்க உதவும் ஆனால் இதுவே தலையாய பிரைச்சனையாய் இருக்கும்.
- புது மாடல்களின் வரவால் பழைய மாடல்களின் மவுசு, விலை அதிரடியாகக்குறையும்.
இப்போ நான் அமைதியாகிவிட்டேன் அருமையான வாதம். என்னால் மறுத்துப் பேசமுடியவில்லை......
உண்மைகள் கசப்பானவை
12மறுமொழிகள்:
அடேங்கப்பா என்ன ஒரு ஆராய்ச்சி????
குமரன்
மயூரெசன் அருமையான ஆய்வு!
படிப்பிலையும் இப்பிடி எல்லாம் ஆய்வு செய்வீங்களா???
இளமை இளமைதானப்பா...நல்ல கண்டுபிடிப்பு. ஆனா எங்க வீடுகளில குழப்பத்த உண்டு பண்ணாதீங்கப்பா...
// மலைநாடான்//
ஆமாம்!
இது இளசுகளுக்கான பதிவு......
மற்றவர்கள் பார்த்து உங்கள் குடும்ப வாழ்க்கையை பாழாக்க வேண்டாம்.......
மயூரேசா!
தலைப்பைப் படித்ததும்; "பெண்" என்றே மனம் கூறியது. பக்கத்தைத் திறந்தேன். சரியாத் தான் சொல்லியிருக்குறீங்க!. நீங்க விவரமாக எதையும் ஆய்கிறீர்கள்! இன்னம் கல்யாணம் ஆகவில்லைத் தானே! இப்படியான ஆய்வு இந்த வயதில் சர்வ சாதாரணம். நல்லா ஆயுங்க!
யோகன் பாரிஸ்
மயூரேசா!
தலைப்பைப் படித்ததும்; "பெண்" என்றே மனம் கூறியது. பக்கத்தைத் திறந்தேன். சரியாத் தான் சொல்லியிருக்குறீங்க!. நீங்க விவரமாக எதையும் ஆய்கிறீர்கள்! இன்னம் கல்யாணம் ஆகவில்லைத் தானே! இப்படியான ஆய்வு இந்த வயதில் சர்வ சாதாரணம். நல்லா ஆயுங்க!
யோகன் பாரிஸ்
யோகன் பாரிஸ்! இந்தப் பதிவை தமிழ் மன்றத்தில் போட்டேன் அங்கு ஒரு அன்பர் கணணி பெண் இல்லை என்பதற்கான வாதங்களை முன்வைத்தார் அவை வருமாறு
1. பீட்டர் விட்டு கணிணிகள் தமிழ் பேசுகிறதே??
2. அப்பப்ப அப்கிரேட் பண்ணிக்கலாமே
3. புதுசு வாங்கினா பழசு கோவிச்சுக்காதே
4. பூரிக்கட்டையும் அப்பளக் குளவியும் கணிணியிலிருந்து பறப்பதில்லையே
5. நினைக்கும் போது கணிணியை ஷட்டவுன் இல்லைன்னா ஆஃப் பண்ணிரலாமே
6. கணிணி தங்கம் கேட்பதில்லையே
கனடாவில் இதே தலைப்பில் ஒரு பட்டிமன்றம் நடத்தினோம், எங்கள் பல்கலைக்கழக கலை நிகழ்ச்சி ஒன்றில்; அதிலும் கணினி பெண் தான் என்று நடுவர் தீர்ப்பளித்தார்.
______
CAPital
http://1paarvai.wordpress.com/
http://1kavithai.wordpress.com/
//கனடாவில் இதே தலைப்பில் ஒரு பட்டிமன்றம் நடத்தினோம், எங்கள் பல்கலைக்கழக கலை நிகழ்ச்சி ஒன்றில்; அதிலும் கணினி பெண் தான் என்று நடுவர் தீர்ப்பளித்தார்.//
இது இருபக்கமும் சமமாக பார்க்கக் கூடிய தலைப்பு நீங்க நல்லா வாதாடி உங்க பக்கம் நடுவரை மாற்றிவிட்டீங்க போல இருக்குது????
இந்தப் பதிவின் ஒரு பகுதி இந்த வார குங்குமம் (ஆகஸ்டு 3வது வாரம்) இதழில் 92 அல்லது 93ஆம் பக்கத்தில் வெளியாகியிருக்கிறது....
//kanani- penthan- illai- enraal- enn- en -amma -ennai -theddukerar -adikadi -kanani- mun -irukathe- keddu -poiuruvai -enru//
அதுதான் தெளிவா விளக்கிட்டம்ல?
உண்மையில சொல்லப்போனா இது ஒரு பழய பகிடி. பிரஞ்சு மொழியில எல்லா சொல்லுக்கும் பால் இருக்குது. மேசை ஆண்பால், கதிரை பெண்பால் - ஏனெண்டு கேக்காதியள்!! computer கிட்டடியில வந்த சொல்லெண்டபடியால் அதுஎன்ன பாலெண்டு தீர்மானிக்கிறது ஒரு பிரச்சினையாப் போட்டுது. அது சம்பந்தமா:
http://gleez.com/articles/humor/computer_-_masculine_or_feminine
Post a Comment
<< முகப்பு