உலகின் முதலாவது தமிழர் வான்படை களத்தில் இறங்கியது!

யாழ். பலாலி சிறிலங்கா படைத்தளம் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் விமானத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
பலாலி படைத்தளம் மீது வெள்ளிக்கிழமை இரவு 9.30 மணியளவில் விடுதலைப் புலிகள் தங்களது விமானம் மூலம் ரொக்கெட்டுக்களை வீசித் தாக்குதல் நடத்தினர்.
இத்தாக்குதலில் விடுதலைப் புலிகளின் ஒரு விமானம் ஈடுபடுத்தப்பட்டதாக யாழ். செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த விமானத் தாக்குதலைத் தொடர்ந்து பலாலி படைத்தளத்திலிருந்து சிறிலங்கா இராணுவத்தினர் நடத்தி வந்த எறிகணைத் தாக்குதல் நிறுத்தப்பட்டுள்ளது.
"எமது தாயகத்தையும் மக்களையும் பாதுகாக்க எமது முப்படையினரையும் நாம் பயன்படுத்துவோம்" என்று விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இ.இளந்திரையன் அறிவித்துள்ளார்.
சிறிலங்கா இராணுவத்தினரின் முன்னரங்க நிலைகளையொட்டிய இராணுவ முகாம்களுக்கு அருகாமையில் உள்ள பொதுமக்கள் இடம்பெயர்ந்து செல்லுமாறு விடுதலைப் புலிகளின் உத்தியோகப்பூர்வ வானொலியான புலிகளின் குரல் வேண்டுகோள் விடுத்து வருகிறது.
எழுதுமட்டுவாள், புலோப்பளை, கிளாலி, கொடிகாமம், கச்சாய், வரணி ஆகிய இடங்களில் உள்ள இராணுவ முகாமுக்கு அருகாமையில் வசிக்கும் மக்கள் 1 கிலோ மீற்றர் தூரம் இடம்பெயர்ந்து செல்லுமாறு வேண்டுகோள் புலிகளின் குரல் வானொலியில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

13மறுமொழிகள்:

Anonymous Anonymous மொழிந்தது...

தமிழன் என்று சொல்லடா!
தலைநிமிர்ந்து நில்லடா!

தமிழன் என்றொரு இனமுண்டு!
தனியே அவனுக்கோர் குணமுண்டு.

இப்படை தோற்கின் எப்படை வெல்லும்

வீழ்வது யாமாக இருந்தாலும்
வாழ்வது தமிழாகட்டும்.

2:45 pm  
Blogger Jay மொழிந்தது...

//புலிகள் அதிகாரபூர்வமாக அறிவிக்கும்வரை உப்பிடிக்கதைகளை வெளியிடுவதை நிறுத்துவது நல்லதென்று படுகிறது//
நீங்கள் கூறுவது சரிஎன்றே படுகின்றது!!!


//தமிழன் என்று சொல்லடா!
தலைநிமிர்ந்து நில்லடா//
அடடா ரெம்பவே உணர்ச்சிவசப்பட்ட நிலையில் எழுதி இருக்கீங்க போல இருக்குது!!!!

9:24 am  
Blogger புதுமை விரும்பி மொழிந்தது...

தகவலுக்கு நன்றி. புலிகளால் பறந்து தாக்கவும் முடியும் கழுகைப்போல- என்னை மிகவும் சந்தோசப்படுத்திய செய்தி.

4:49 pm  
Blogger CAPitalZ மொழிந்தது...

"உலகின் முதலாவது தமிழர் வான்படை களத்தில் இறங்கியது!"

தமிழ் நாட்டு தமிழரிடம் வான்படை இல்லையா?

7:52 pm  
Blogger Jay மொழிந்தது...

//தகவலுக்கு நன்றி. புலிகளால் பறந்து தாக்கவும் முடியும் கழுகைப்போல- என்னை மிகவும் சந்தோசப்படுத்திய செய்தி.//
நம்மையும் தான்!

//தமிழ் நாட்டு தமிழரிடம் வான்படை இல்லையா?//
அது தனித் தமிழர்களிற்குரிய வான் படை இல்லையே!

11:20 am  
Anonymous Anonymous மொழிந்தது...

வான்படைதாக்குதல் உண்மையிலேயே நடந்ததா? ஊடகங்களோ, புலிகளோ, சிங்கள இராணுவமோ இதை உறுதிப்படுத்தவில்லை. மாறாக நீண்ட தொலையிலிருந்து தாக்க வல்ல குண்டுகளை உபயோகப்படுத்தியதாகவே தெரிகிறது. வான் தாக்குதல் என்றால் ஓடுதளம் வேண்டும். கூகுள் எர்த் பார்வையிலிருந்து அது தப்பவும் முடியாது. எனவே இது உறுதிப்படுத்தப்படாத மற்றும் பேராவல் காரணமாக பரபரப்புக்காக வெளியிடப்பட்ட தகவல் என்றே இனங்காண முடிகிறது.

12:58 pm  
Blogger புதுமை விரும்பி மொழிந்தது...

துணைவன்,

Google-earthல் நாம் பார்க்கும் காட்சிகள், சில வருடங்களுக்கு முன் சாட்டிலைட் மூலம் எடுக்கப்பட்ட படங்களின் தொகுப்பு. அதனால், சமீபத்தில் நிலப்பரப்பில் உருவாக்கப்பட்ட, தளங்கள் தெரியவேண்டும் என்ற அவசியம் இல்லை.

2:56 pm  
Blogger யாரோ - ? மொழிந்தது...

Mr Thiruvadiyan ltte has two runway.. don't u know dat.. I think u don't know about eelam.

2:56 pm  
Blogger திருவடியான் மொழிந்தது...

ஓடுதளம் இருக்கிறதா, அது Google Earthல் தெரிகிறதா என்பது கேள்வியில்லை. கேள்வி என்னவென்றால் உண்மையில் வான் தாக்குதல் நடைபெற்றதா, இல்லை வெறும் ஊகம் தானா?

எமக்கு ஈழத்தையும் தெரியும் அவர்கள் SKD-யாகக் கொண்டு வந்த Microlite Aircraft பற்றியும் தெரியும்.

3:54 pm  
Blogger Jay மொழிந்தது...

இராணுவத்தால் குண்டு போடப்பட்ட ரண்வேயை கூகள் ஏர்த் படத்தில் பார்த்ததாக ஞாபகம் உண்டு. ஆகவே ரண்வே உண்டு என்பது மட்டும் உண்மையே!

11:38 am  
Anonymous Anonymous மொழிந்தது...

கூகில் ஏர்த்தில் தப்பாத விமானத்தளம்.
இங்கே இருக்கிரது.
http://eebarathi.blogspot.com/2006/06/blog-post_115135089900176944.html

1:44 pm  
Blogger Suban மொழிந்தது...

இதற்கு ஆதாரம் ஏதாவது இருக்கா??

12:21 am  
Anonymous Anonymous மொழிந்தது...

Suban மொழிந்தது...
இதற்கு ஆதாரம் ஏதாவது இருக்கா??

ஆதாரம் http://eebarathi.blogspot.com/2006/06/blog-post_115135089900176944.html

3:00 pm  

Post a Comment

<< முகப்பு