த டாவின்சி கோட் திரைவிமர்சனம்

Photobucket - Video and Image Hosting
2000 ம் ஆண்டுகளாக பூட்டி வைக்கப்பட்டுள்ள இரகசியம். இது வெளியானால் மனித விழுமியத்தின் ஆணி வேர் ஆட்டம் காணும். இது தான் த டா வின்சி கோட் திரைப்படத்தின் உள்ளடக்கம். திரைப்படமும் சரி நாவலும் சரி பெரியளவில் சர்ச்சைக்குள்ளானது. காரணம் கதையில் பயன் படுத்தப்பட்ட ஒரு புனிதர் உலக அளவில் அதிகமானோர் மதிக்கும் யேசுநாதர்.

டாம் ஹாங் சின்னங்கள் (Symbols) பற்றிய ஆராய்ச்சி செய்யும் ஒரு அமேரிக்கப் பேராசிரியர். பாரிசுக்கு ஒரு விரிவுரை நிகழ்த் வந்த இடத்தில் விதி விளையாட ஆரம்பிக்கின்றது.

பாரிஸ் அருங்காட்சியத்தில் நூதனப் பொருட்களின் காப்பாளராக பணியாற்றும் ஒருவர் கொலை செய்யப்படுகின்றார். இறந்த நூதனசாலை பணியாளர் தன் நெஞ்சில் நட்சத்திரக்குறி போன்ற தடயங்களை கீறி விட்டு மரணித்து விடுகின்றார். பாரீஸ் காவல் துறை டாம் ஹாங்கின் உதவியை நாடுகின்றது. பின்பு இறந்தவரின் பேத்தியுடன் சேர்ந்துகொள்ளும் டாம் ஹாங் பல புதிர்களை ஒன்றின் பின் ஒன்றாக விலக்குகின்றார். இதே வேளையில் காவல்துறையின் சந்தேகம் டாம் ஹாங்கின் பக்கம் திரும்புகின்றது. இப்படியாக கதை நகர்கின்றபோது யேசு நாதருக்கு சந்ததி உள்ளமை தெரிய வருகின்றது.

இதற்கிடையில் யேசு பிரானின் சந்ததி பற்றிய ஆதாரங்களை அழிக்க ஒரு குழுவும், இரகசியமாக பாதுகாக்க இன்னுமொரு குழுவும் அலைந்து திரிகின்றது. இதில் முன்னைய குழுவால் டாம் ஹாங்கும் நாயகியும் துரத்தப்படுகின்றனர். நம்பிக்கை நம்பிக்கைத் துரோகம் என்று கதை விறு விறுப்பாக நீள் கின்றது.

கதையின் இறுதியில் தற்போதைய வாரிசு யாரேன்று தெரியவருகின்றது (அதை இங்கு கூறினால் நீங்கள் படம் பார்ப்பதில் அர்த்தம் இல்லை).
ஒவ்வொரு கட்டத்திலும் பல வரலாற்று உண்மைகளை கதையுடன் இணைத்துள்ளவிதம் ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றது. குறிப்பாக டா வின்சியின் இறுதி இராப்போசனம் சித்திரத்தில் செய்யப்படும் வெட்டுக் கொத்து (நம்ப முடியாமல் நானும் போடோ ஷாப்பில் செய்து பார்த்தேன் சரியாகத் தான் பொருந்துகின்றது).

ஏது எவ்வாறாயினும் இப்படி யொரு படம் எடுக்கத் துணிவு, நிறைந்த படைப்பாற்றல் நிச்சயம் வேண்டும். கிறீஸ்தவர்களின் மனதை இப்படம் புண்படுத்தும் என்பதில் ஐயமில்லை. இலங்கையில் இப்படத்தை தடைசெய்து விட்டார்கள் (திருட்டு VCD ல் பார்த்தேன்). எனக்கென்னவோ மற்றவாகளின் உணர்வுகளுடன் விளையாடுவது அவ்வளவாகப் பிடிக்கவில்லை அதற்காக கதையை இரசிக்காமலும் இருக்க முடியவில்லை.

சர்தார் ஜீ பகிடிகள் 2 ம் பாகம்…………….

சர்தார் ஜீ தன் வாழ்க்கையில் இரயில் வண்டியைப் பார்த்ததில்லை. ஒரு நாள் மும்பாய் இரயில் நிலையத்தில் நின்றபோது ரயில் தடத்தைப் (Track) பார்த்தார். ஒன்றும் விளங்காத சர்தார் ஜீ அதன் நடுவால் நடந்து போனார். அப்போது அங்கு வந்து இரயில் ஒன்று சர்தார் ஜீயை அடித்துத் தள்ளியது. நல்ல வேளையாக சார்தார் ஜீ சிறிய காயங்களுடன் தப்பினார். சில நாட்கள் கழிந்து சர்தார் ஜீ தன் நண்பர் வீட்டுக்குச் சென்றார். நண்பர் வீட்டு சமயலறையில் தண்ணீர் கேத்தல் விசிலடித்தது. அருகிலிருந்த இரும்புக் கம்பியால் தண்ணீர் கேத்தலை அடித்து நொருக்கினார் சர்தார். சத்தம் கேட்டு உள்ளே நுழைந்த நண்பர் எதற்காக இப்படிச் செய்தாய் என்று கேட்டதற்கு சர்தார் ஜீ கூறினார் “இந்த சாமான்களை சின்னதாக இருக்கும் போதே அழித்து விடவேண்டும் எனக் கூறினார்”.


சர்தார் ஜீ மீண்டும் ஒரு நாள் இரயில் நிலையத்திற்குச் சென்றார். அங்கு இருந்த ஒரு பயனியிடம் கேட்டார்.
சர்தார் ஜீ : இராஜஸ்தான் எக்பிரஸ் இவ்விடத்தால் செல்லுமா?
பயனி : மதியம் 12.30 க்குச் செல்லும்
சாதார் ஜீ : அப்போ பஞ்சாப் எக்ஸ்பிரஸ் எத்தனை மணிக்குச் செல்லும்?
பயனி : 10.30
சர்தார் ஜீ : சரி! சரி! அப்பிடியானால் மும்பாய் எக்ஸ்பிரஸ் எத்தனை மணிக்கு?
இவ்வாறு தொடர்ந்து கேள்வி கேட்டதால் மிகவும் கோபமடைந்த பயனி கேட்டார்
பயனி : நீங்க பஞ்சாப்புக்குத்தானே போகவேண்டும்?
சர்தார் ஜீ : இல்லை இந்த இரயில் தடத்தை (Track) கடக்கவேண்டும்


சர்தார் ஜீ வீட்டு தொலைபேசி ஒலித்தது
“ஹலோ! இது இரண்டு இரண்டு இரண்டு இரண்டா?” குரல் கேட்டது
சர்தார் ஜீ : இல்லை இது இருபத்தி இரண்டு இருபத்தி இரண்டு
குரல் : இந்த இரவிலே உங்களை எழுப்பியதற்கு மன்னிக்கவும்
சர்தார் ஜீ : பரவாயில்லை எப்படியும் இந்த நேரம் என் நண்பன் ஒருவன் அழைப்பு எடுப்பதாக கூறினார்


சர்தார் ஜீ இரு காதுகளிலும் நெருப்புக் காயங்கள்ளுடன் ஒரு வைத்தியரிடம் வந்து சேர்ந்தார்.
வைத்தியர் : என்ன இது! எப்படி ஏற்பட்டது இந்தக் காயம்?
சர்தார் ஜீ : நான் உடுப்புகளை இஸ்திரி போட்டுக்கொண்டு இருந்தபோது என் நண்பன் ஒருவன் தொலைபேசி அழைப்பை எடுத்தான். நான் மாறி தொலைபேசி என்று இஸ்திரிப் பெட்டியை காதில் வைத்து விட்டேன்
வைத்தியர் : அப்போ மற்றக்காதில் எப்படி?
சர்தார் ஜீ : அந்த முட்டாள் மீண்டும் தொலைபேசி அழைப்பை எடுத்தான்.


சர்தார் ஜீ ஒரு நாள் தன் உறவினரின மரணச் சடங்கிற்கு தொலைநோக்கியுடன் சென்றார். ஏனெனில் இறந்தவர் சர்தார் ஜீ யின் தூரத்து உறவினன் ஆவார்.


சர்தார் ஜீ தன் நண்பருடன் உரையாடினார்
சர்தார் ஜீ : நான் பஞ்சாப்பில் பிறந்தேன்
நண்பர் : அப்படியா? எந்தப் பகுதி?
சர்தார் ஜீ : என் முழுப்பகுதியும் பஞ்சாப்பிலேதான் பிறந்தது


ஒரு தடவை உலகின் பிரபலமான நிவ் யார்க் காவல் துறை, ஸ்கொட்லண்ட் காவல் துறை மற்றும் சர்தார் ஜீ தலைமையில் பஞ்சாபிய காவல் துறை ஆகியன தம்மில் சிறந்த காவல் துறை அமைப்பைக் கண்டறிய ஒரு போட்டி வைத்தனர். போட்டியின் படி அருகிலிருந்த காட்டினுள் சென்று ஒரு சிங்கத்தைக் கட்டி யிழுத்து வரவேண்டு்ம். முதலில் நுழைந்தது ஸ்கொட்லாண்ட் காவல் துறை. சரியாக ஒரு மணி நேரத்தில் ஒரு திடகாத்திரமான ஆண் சிங்கத்தைக் கட்டியிழுத்து வந்தனர். அடுத்து நுழைந்தது நிவ்யார்க் பொலீஸ் டிபார்ட்மென்ட் (NYPD) சுமார் 15 நிமிடத்தில் ஒரு சிங்கத்தைப் பிடித்து வந்தனர். இறுதியில் நம்ம சர்தார் ஜீ தலைமையிலான பஞ்சாப் அணி களமிறங்கியது. சுமார் 3 மணி நேரம் கடந்தும் பஞ்சாப் அணி வராததால் கவலையுற்ற ஏனைய அணிகள் பஞ்சாப் அணியைத் தேடி காட்டினுள் நுழைந்தன. சிறிது நேரத்திற்கெல்லாம் சர்தார் ஜீ சத்தம் போட்டுப் பேசுவது கேட்டது. அங்கு சென்று பார்த்தபோது. சர்தார் ஜீ குழுவினர் ஒரு கரடியை மரத்தில் கட்டிவைத்திருந்தனர். சந்தர் ஜீ சத்தமிட்டார் “ம்....! ஒத்துக்கொள் நீ ஒரு சிங்கம்! சரியா?”.


ஒரு தடவை சர்தரர் ஜீ தற்கொலை செய்ய முடிவு செய்தார். கையிலே சிறிது வைன் மற்றும் பாண் என்பவற்றுடன் சென்றார். இவரை மறித்த ஒரு நபா கேட்டார். “எதுக்கு தற்கொலை செய்யும் உங்களுக்கு உணவு வகை?”
“இந்திய இரயில்களை நம்ப முடியாது. நேரத்திற்கு வராவிட்டால் நான் பட்டினியால் இறக்க நேரிடும்”.


ஒரு தடவை சர்தார் ஜீ கடுமையான பண நெருக்கடிக்கு உள்ளானார். இதிலிருந்து மீள ஆலயத்திற்குச் சென்று பகவானை வேண்டிக் கொண்டார். “இறைவா எனக்கு இன்று அதிஷ்டலாப சீட்டில் பணம் கிடைக்க வேண்டும்”. ஆனாலும் அவ்வாறு நடக்கவில்லை. சற்றும் சளைக்காத சாதார் ஜீ மீண்டும் மீண்டும் பகவானிடம் இப்படியே வேண்டினார். ஒரு நாள் வழமை போல சர்தார் ஜீ பகவானை வேண்டிக்கொண்டிருக்கும்போது கண்களை குருடாக்கும் ஒளிக் கீற்று ஒன்று தோன்றிக் கூறியது “முதலில் அந்த சீட்டை வாங்குப்பா!”.


துப்பறிவாளர் வேலைக்காக ஒரு யூதன், இத்தாலிக்காரன், சர்தார் ஜீ ஆகியோர் சென்றனர். நேர்காணல் ஆரம்பமாகியது. முதலில் யூதனிடம் கேட்கப்பட்ட கேள்வி “யார் யேசுவை கொலை செய்தனர்?”. தயக்கத்தின் பின்பு யூதன் கூறினான் “அது ரோமர்கள்”.
அதே கேள்வி இத்தாலிக்காரனிடமும் கேட்கப்பட்டது. அதற்கு அவன் “இது யூதர்களின் வேலை என்று கூறினான்”.
அடுத்து சர்தார் ஜீயிடம் அதே கேள்வி கேட்கப்பட்டது. பதிலை தான் மறு நாள் கூறுவதாக வாக்களித்தார் சர்தார் ஜீ. வீடு திரும்பிய சர்தார் ஜீ யின் மனைவி கேட்டார் “எப்படி இன்டாவியூ?”.
“ம்...! எனக்கு உடனெயே வேலை கிடைத்து விட்டது. நான் இப்பொது ஒரு கொலைபற்றி துப்பறிந்துகொண்டு இருக்கின்றேன்”.


சிறைச்சாலையிலிருந்து ஒரு தமிழன், குஜராத்தி, சர்தார் ஜீ ஆகிய மூவரும் தப்பினர். நீண்ட தூரம் ஒட முடியாத மூவரும் அருகிலிருந்த பழைய மண்டபத்தினுள் சென்று தம்மைத் தாமே கோணிப் பைகளில் கட்டிக்கொண்டனர். சிறிது நேரத்தில் அங்கு பொலீஸ் படையணி வந்து சேர்ந்தது. முதலில் தமிழன் இருந்த மூட்டையை காவல் துறை அதிகாரி காலால் உதைத்தார் அப்போது அவன் “வவ்! வவ்!” எனச் சத்தம் இட்டான். அடுத்து குஜராத்தி “மியாவ்! மியாவ!” எனச் சத்தமிட்டார். இந்த இரு கோணிப் பைகளிலும் முறையே நாய் மற்றும் பூனை இருப்பதாக எண்ணிக்கொண்டனர் காவல் துறையினர். இறுதியாக அவர்கள் சர்தார் ஜீ இருந்த பையை எட்டி உதைத்தார் நீண்ட நேரம் எந்த சத்தமும் வரவில்லை. மீண்டும் ஓங்கி உதைத்த போது “உருளைக் கிழங்கு” என ஒரு சத்தம் வந்தது.

சந்தர் ஜீ பகிடிகள்...

சனத்தொகை பற்றி ஓர் ஆசரியர் கற்பிக்கின்றார் “இந்தியாவில் ஒவ்வொரு 10 வினாடிக்கும் ஒரு பெண் ஒரு குளந்தையைப் பெறுகின்றாள்.
சந்தர் ஜீ : நாங்கள் அவளைக் கண்டுபிடித்து நிறுத்த வேண்டும்


சந்தர் ஜீ : ஏன் இவங்களெல்லாம் தலை தெறிக்க ஓடுறாங்க?
மற்றவர் : இது ஓட்டப் பந்தயம். முதலில் ஓடுபவருக்கு பரிசு உண்டு
சந்தர் ஜீ : முதலாவது ஓடுபவருக்குத்தான் பரிசு என்றால் எதுக்கு மற்றவர்கள் பின்னால் கலைத்துக்கொண்டு ஓடுகினம்?


ஆசிரியர் : “நான் ஒருவனைக் கொலை செய்தேன்”. இதன் எதிர் காலம் என்ன?
சந்தர் ஜீ : “நீங்கள் சிறைக்குப் போவீர்கள்”


சந்தர் ஜீ ஒரு தடவை வேலைக்கு விண்ணப்பம் நிரப்பினார். அங்கு ஒரு பகுதியில் சம்பள எதிர்பார்ப்பு என்று இருந்தது. நீண்ட நேர யோசனையின் பின்பு சந்தர் ஜீ ஆம் என்று நிரப்பினார்


பேராசிரியர் சந்தர் ஜீ ஒரு தடவை பிளம்பரை (plumber) பல்கலைக் கழகத்திற்கு வரச்சொன்னாராம். ஏன் என்றால் எப்படி பரீட்சை வினாத் தாள்கள் வெளியே கசிகின்றன என அறியத்தான்.


சந்தர் ஜீ தனது வீட்டு தோட்டக்காரனுக்கு : பூ மரங்களுக்கு தண்ணியூத்துப்பா!
தோட்டக்காரன் : ஏற்கனவே வெளியே மழை பெய்யுதே?
சந்தர் ஜீ : அதனால் என்ன? குடைய பிடிச்சுக்கொண்டு தண்ணி ஊத்துறது…


சந்தர் ஜீக்கு ஒரு தடவை சீட்டிழுப்பில் 20 கோடி பரிசு வீழ்ந்தது. முகவர் வரி முதலியவற்றை கழித்து விட்டு மீதம் 15 கோடியைக் கொடுத்தார். கோபம் அடைந்த சந்தர் ஜீ சொன்னார் “ என்னுடைய 20 கோடியைத்தா! இல்லா விட்டால் என் 20 ரூபா டிக்கட் காசைத்தா!”


சந்தர் ஜீ ஒரு தடவை அருங்காட்சியகத்திற்குச் சென்றார்.
சந்தர் ஜீ விளக்க உரைஞருக்கு : என்னப்பா இது புதுச் சித்திரம் என்ற பெயரில இப்படி பயங்கரமான உருவமெல்லாம் வரைவீங்களா?”
விளக்க உரைஞர் : மன்னிக்கோணும் நீங்க பார்த்துக் கொண்டு இருப்பது ஒரு கண்ணாடி


சந்தர் ஜீ ஒரு தடவை தன் காதலை ஒரு பெண்ணிடம் சொன்னார்.
பெண் : எனக்கு உங்களயும் விட 1 வயது கூடவே?
சந்தர் ஜீ : அதனால் என்ன அடுத்த வருடம் உன்ன நான் கட்டிக்கிறேன்


சந்தர் ஜீ மிக மெதுவாக ஒரு கடிதம் ஒன்றை எழுதிக்கொண்டு இருந்தார்
நண்பர் : ஏன்யா இவ்வளது ஸ்லோவா கடிதம் எழுதறா?
சந்தர் ஜீ : என் மகன் இப்பத்தான் எழுதப் பழகிறான் அவன் மெதுவாகத்தான் வாசிப்பான் அதுதான்……


சந்தர் ஜீ தன் மகனுக்கு : உன் வயசில வாஷிங்டன் எப்படியெல்லாம் கஷ்டப் பட்டு சம்பாதித்தார் தெரியுமா? நீயும் இருக்கிறியே! தண்டச் சோறு???
மகன் : உங்க வயசில அவர் அமேரிக்க ஜனாதிபதி ஆகிட்டார். நீங்களும் இருக்கிறீங்களே??? பொறுப்பில்லாத அப்பன்!.