NanoTechnology - நனோதொழில்நுட்பம்

எனது பொறியியல் பீட நண்பர்களுடன் பேசும் போது ஏதோ நனோ டெக்னாலஜி என்று பேசிக்கொண்டனர். எனக்கு அது என்ன என்று புரியவில்லை. என்ன என்று கேட்டபோது அவர்கள் “உங்களமாதிரி கம்பியூட்டரோட குப்பகொட்டப்போற பசங்களுங்க அதெல்லாம் தேவையில்லை. நீ போய் பேசாம ஜாவாவை வைத்து ஏதாவது பண்ணப்பாரு”.

ஆர்வம் தாங்காது நான் இணையத்தில் கிண்டியதில் கிடைத்த விடயம் இவை. சத்தியமாக இது ஆழமான கட்டுரையாக எனக்கு தோன்றவில்லை. இங்கு நனோ டெக்னாலஜி பற்றிய ஓர் அடிப்படை அறிவை நீங்கள் பெற்றுக் கொள்ளலாம் என்று நம்புகின்றேன். மொழி எக்காரணம் கொண்டும் தமிழர்களிற்கு தடைக்கல்லாக இருக்கக் கூடாது என்பதே என்விருப்பம்.

நனோ டெக்னாலாஜி எனப்படுவது வடிவமைப்பு, பண்பு, தயாரிப்பு மற்றும் பிரையோக வடிவமைப்புகள், கருவிகள் என்பவற்றை நனோ அளவிடையில் கையாள்வதே. ஒரு நனோ மீற்றர் என்பது எட்டு தொடக்கம் பத்து வரையான அணுக்களின் சேர்க்கையாக அமைக்கின்றன. சாதாரணமாக மனித தலைமுடி 70,000 முதல் 80,000 நனோ மீற்றர் தடிப்புடையது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

நனோ தொழில் நுட்பம் என்பது உண்மையிலேயே நனோ தொழல் நுட்பங்கள் என்றே அழைக்கப்பட்டிருக்க வேண்டும். காரணம் நனோ தொழில் நுட்பம் ஒரு தனிப்பட்ட துறையில் மட்டும் செல்வாக்கு செலுத்த தொடங்கவில்லை மாறாக உயிரியல், இரசாயணவியல், பெளதீகவியல், அல்லது ஏதாவது விஞ்ஞாணத் துறை அல்லது இவற்றின் சேர்க்கை போன்றவற்றில் ஆதிக்கம் செலுத்துகின்றது.

கருவிகளை சிறிதாக்கும் தேடலில் atomic force microscope (AFM) and the scanning tunneling microscope (STM) போன்ற கருவிகள் விளைவாகக் கிடைத்தன. இவை குளப்பமானதும் வினைத்திறனானதுமமான electron beam lithography உடன் சேர்ந்து அணுக்களை ஒழுங்கு படுத்தவும் அதன் மூலம் அமைப்புகளை உருவாக்கவும் உதவி புரிகின்றன.

இது பற்றி முதலில் டிசெம்பர் 29, 1959 ல் பொளதீகவியல் ஆய்வாளர் றிச்சாட் ஃபென்மான் ஒரு உரையை நிகழ்த்தினார். அதன் தலைப்பு "There's Plenty of Room at the Bottom,". இந்த தொழில் நுட்பத்தால் பொளதீகவியல் பிரயோகங்களில் மாற்றம் ஏற்படும் என்பதையும் அவர் குறிப்பிடத் தவறவில்லை. அதாவது புவியீர்ப்பு கொள்கை போன்றவை செயலிழந்து போவதுடன் மேற்பரப்பு இழுவிசை மற்றும் வன்டர்வாலின் கவர்ச்சி என்பன முக்கியத்துவம் பெறுகின்றன.

நனோ தொழில் நுட்பம் என்ற பதம் முதலில் டோக்கியோ விஞ்ஞானப் பல்கலைக்கழகப் பேராசிரியர் நொரியோ டாரிகுசி என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது. 1980 களில் இந்த கருத்து மேலும் டாக்டர் எரிக் டிரெக்ஸ்லர் என்பவரால் பகுத்தாராயப்பட்டது. இவரே நனோ தொழில் நுட்பத்தை பேச்சுக்கள் மற்றும் புத்தகங்கள் மூலம் வெளிக்கொணர்ந்தவர்.

1980 களில் இரண்டு கண்டு பிடிப்புகளுடன் நனோ தொழில் நுட்பம் வளர்ச்சி அடையத்தொடங்கியது.
*cluster science பிறப்பு
*scanning tunneling microscope (STM) இன் கண்டு பிடிப்பு

இந்த தொழில் நுட்பம் மூலம் வெவ்வேறு பண்புகளையுடைய துணிக்கைகளை ஒன்று சேர்க்க முடிகின்றது உதாரணமாக காந்தவியல், மின்னியல் அல்லது ஒளியியல் போன்றவற்றைக் குறிப்பிடலாம். நனோ துணிக்கைகள் தொகையாக கொண்டு வரும் போது அவை தமது பொறியியல் தன்மையைக் காட்டுகின்றன. உதாரணமாக பாரம்பரிய பொலிமரை நனோ தொழில் நுட்பத்தால் உறுதியூட்டப்படலாம். இவற்றை நாம் உலோகங்களிற்குப் பதிலாகப் பயன்படுத்தலாம். இதன்காரணமாக பாரமற்ற உறுதியான அமைப்புகள் கிடைக்கின்றன.

இந்தியா உட்பட பல நாடுகளில் இந்த ஆராய்ச்சி நடைபெறுகின்றது. இது அடுத்த தலைமுறையின் தொழில் நுட்பம் எனக்கருதப்படுவதால் ஆராய்ச்சிகள் மிக இரகசியமாகவே நடைபெறுகின்றன.

இவைதான் நான் தேடிக்கண்டு பிடித்தது நனோ தொழில் நுட்பம் பற்றிய ஒரு அடிப்படை அறிவை இது உங்களிற்கு வழங்கி இருக்கம் என நம்புகின்றேன்.

இலங்கையின் இலவசக் கல்வித்திட்டம்

கிறிஸ்தோபர் வில்லியம் விஜயகோன் கன்னங்கரா இலங்கையின் கல்வித்துறையின் தந்தையாக வர்ணிக்கப்படுகின்றார். இவரே இலங்கையில் இலவசக் கல்வித்திட்டம் அறிமுகப்படுத்தப்பட காரணமாக அமைந்தார். இவர் அக்டோபர் 14, 1884 ல் பிறந்தார். இவர் அம்பலாங்கொடை வெஸ்லி ஆங்கில உயர் பாடசாலையிலும் பின்பு காலி றிச்மன்ட் கல்லூரியிலும் கல்விபயின்றார். பின்னர் இவர் ஆசிரியராக மொரட்டுவை பிரின்ஸ் ஆப் வேல்ஸ் கல்லூரி போன்ற பாடசாலைகளில் கடமையாற்றினார். சட்டத்துறையில் தகுதிபெற்ற இவர் பின்பு காலியில் சட்டத்தரணியாகக் கடமையாற்றினார். 1919 ல் அரசியலில் நுழைந்து கொண்டார். செப்டெம்பர் 29, 1969 ல் இறைவனடி சோர்ந்தார்.

இதை நான் எழுதக்காரணம் இன்று இலங்கையின் கல்வியறிவு இத்தனை பிரைச்சனைக்கு மத்தியிலும் 90 விழுக்காடாக இருப்பதற்கு இவர் செய்த தூரநோக்கான முயற்சியே காரணமாகும். இன்று பாடசாலைமுதல் பல்கலைக்கழகம் வரை இலவசமாக கல்வி வழங்கப்படுகின்றது.

இலவச கல்விக்கு எதிர்ப்பு கருத்துகளும் கொழும்பைத் தளமாக கொண்டு எழுந்துள்ளதைக் கூறலாம். இதன் விழைவாக கடந்து போன அரசு ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியை அமைக்கப்போய் பின்பு அது பெரிய அரசியல் விடயதானமாகி பின்பு அந்த முயற்சி கைவிடப்பட்டது.

ஒருவர் வெளிநாடு சென்று உயர்கல்வி பெறுவதற்காக செலவிடும் பணத்தை இலங்கையிலேயே செலவிட்டால் இலங்கையின் வெளிநாட்டு நாணயம் சேமிக்கப்படும் என்பதே அவர்களின் வாதம். ஆயினும் பின்னர் தனியார் கல்லூரிகள் அரச பல்கலைக்கழகங்களை விட வினைத்திறனாக தொழிற்பட்டுவிடுமோ என்ற பயத்தில் நம்மைப்போன்ற பல்கலைக்கழக மாணவர்கள் கடும் வெயிலிலும் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் ஆர்ப்பாட்டம் செய்தோம். ஏற்கனவே தனியார் பாடசாலைகள் இலங்கையில் வினைத்திறனுடன் இயங்க ஆரம்பித்து விட்டமையையும் இங்கு கூறவேண்டும்.

இங்கே இத்தனைக்கும் மத்தியில் சில நிறுவனங்கள் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களின் பட்டப்படிப்புகளை தாம் கற்பிக்கின்றன. இவை தம்மை நிறுவனங்களாக காட்டிக்கொள்வதுடன் கல்லூரிகளாகக் காட்டிக்கொள்வதில்லை. இதற்கு இலங்கைச் சட்டம் அனுமதிக்கின்றது. பெங்களூர், அமேரிக்கா, லண்டன் என நீங்கள் படிக்கப்போகும் பல்கலை பட்டியல் நீள்கின்றது. இவற்றை அப்போ என்ன செய்வார்கள். இதைவிட தனியார் கல்லூரிகளை அனுமதிக்கலாம் தானே?

இந்தியா, சிங்கப்பூரில் தனியார் கல்வி நிறுவனங்கள் ஆற்றிய ஆற்றும் பணியையும் குறைத்து மதிப்பிட முடியாது. இதை இலங்கை அரசியல் வாதிகளும் புரிந்துகொள்ள வேண்டும்.

எது எதுவாயினும் தூரநோக்கற்ற இலங்கை அரசியல்வாதிகளிடையே கன்னங்கரா போன்ற ஒருவர் கிடைத்தமை இலங்கையரின் அதிட்டமே!