உலகின் முதலாவது தமிழர் வான்படை களத்தில் இறங்கியது!

யாழ். பலாலி சிறிலங்கா படைத்தளம் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் விமானத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
பலாலி படைத்தளம் மீது வெள்ளிக்கிழமை இரவு 9.30 மணியளவில் விடுதலைப் புலிகள் தங்களது விமானம் மூலம் ரொக்கெட்டுக்களை வீசித் தாக்குதல் நடத்தினர்.
இத்தாக்குதலில் விடுதலைப் புலிகளின் ஒரு விமானம் ஈடுபடுத்தப்பட்டதாக யாழ். செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த விமானத் தாக்குதலைத் தொடர்ந்து பலாலி படைத்தளத்திலிருந்து சிறிலங்கா இராணுவத்தினர் நடத்தி வந்த எறிகணைத் தாக்குதல் நிறுத்தப்பட்டுள்ளது.
"எமது தாயகத்தையும் மக்களையும் பாதுகாக்க எமது முப்படையினரையும் நாம் பயன்படுத்துவோம்" என்று விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இ.இளந்திரையன் அறிவித்துள்ளார்.
சிறிலங்கா இராணுவத்தினரின் முன்னரங்க நிலைகளையொட்டிய இராணுவ முகாம்களுக்கு அருகாமையில் உள்ள பொதுமக்கள் இடம்பெயர்ந்து செல்லுமாறு விடுதலைப் புலிகளின் உத்தியோகப்பூர்வ வானொலியான புலிகளின் குரல் வேண்டுகோள் விடுத்து வருகிறது.
எழுதுமட்டுவாள், புலோப்பளை, கிளாலி, கொடிகாமம், கச்சாய், வரணி ஆகிய இடங்களில் உள்ள இராணுவ முகாமுக்கு அருகாமையில் வசிக்கும் மக்கள் 1 கிலோ மீற்றர் தூரம் இடம்பெயர்ந்து செல்லுமாறு வேண்டுகோள் புலிகளின் குரல் வானொலியில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

படித்ததில் பிடித்தது: ஒரு நல்ல சிறுகதை எழுதுவது எப்படி?

படித்ததில் பிடித்தது: ஒரு நல்ல சிறுகதை எழுதுவது எப்படி?
சிறுகதை எழுத விரும்பும் ஆசாமிகள் படிக்க வேண்டிய பதிவு!

இலங்கை அரசின் படைப்பல விபரங்கள்

தம்மிடம் 95 ஆயிரம் இரணுவத்தினர் உள்ளதாகவும்

அந்த இராணுவத்தில்

24 காலாட்படை பிரிக்கேட்கள்

15 ஆயிரம் எஸ்.எல்.என்.ஜி என்ற ஊர்காவல்படை

22 பட்டாலியன்கள் உள்ளதாகவும் சிங்கள இராணுவம் தெரிவிக்கின்றது.

தமது இராணுவத்திடம்

ரி-55 ரக செக் டாங்கிகள் 65 உம்

சீன இலகு டாங்கிகள் உக்ரெய்ன் கவசப் படைத் தாக்குதல் பி.எம்.பி ஊர்திகள், பிரிட்டனின் சலாடின் கவச வாகனங்கள் என்பன 100 உம்

பிரிட்டன் தயாரிப்பு சராசென், தென்னாபிரிக்க பவல், சீன ரக 63, ரஸ்ய பி.ரி.ஆர் - 152, பி.ரி.ஆர் - 80 ஏ ரக கவசத்துருப்புக் காவிகள் 180 உம்

130 மில்லி மீற்றர் ஆட்டிலெறிகள - 12

152 மில்லி மீற்றர் ஆட்டிலெறிகள் - 33

122 மில்லி மீற்றர் ஆட்டிலெறிகள் - 16

கட்யுசா ஆர்.எம் ரக 70 பல்குழல் எறிகணை செலுத்திகள்

இலகு விமான எதிர்ப்புப் பீரங்கிகள் - 40

எறிகணை மோட்டார்கள் மற்றும்

80 ஏ.ரி ரக உந்துகணை செலுத்திகள் - 420

உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டன், பாகிஸ்தான், அவுஸ்திரேலியா, மலேசியா, அமெரிக்கா, இந்தியப் படைகளின் பயிற்சிகளும்

1984 இல் இஸ்ரேலின் சபாக் பாதுகாப்புப் பிரிவின் பயிற்சிகளும் தமது படைகளால் பெறப்பட்டுள்ளதாக சிறிலங்கா அரசு தெரிவிக்கின்றது.

தமது விமானப்படையிடம் 10 ஆயிரம் படையினர் உள்ளதாகவும் அது தெரிவிக்கின்றது.

சீனத் தயாரிப்பு எஃப் - 07 ரக பி.எஸ் விமானங்கள்

எஃப்.ரி - 07 ரக விமானங்கள் - 05

எஃப்.ரி - ரக விமானங்கள் - 02

ரஸ்யாவின் மிக் - 27 ரக விமானங்கள் - 04

கிபீர் ரி.சி - 02 ரக மற்றும் கிபீர் சீ - 07 ரக விமானங்கள் - 13

ரஸ்யத் தயாரிப்பு எம்.ஐ - 24 வி ரக தாக்குதல் உலங்குவானூர்திகள் - 06

எம்.ஐ - 35 பீ ரக தாக்குதல் உலங்குவானூர்திகள் - 02

பெல் - 206, பெல் - 212 மற்றும் பெல் - 214 ரக உலங்குவானூர்திகள் - 23

எம்.ஐ - 17 மற்றும் எம்.ஐ - 171 ரக துருப்புக்காவி உலங்குவானூர்திகள் - 11

பீச் - 200 ரக விமானங்கள் - 04

வை - 12 ரக விமானங்கள் - 04

அன்ரனோவ் - 32 பி ரக துருப்புக்காவி விமானங்கள் - 07

அன்ரனோவ் - 24 ரக விமானங்கள் - 04

சி-130 கே துருப்புக்காவி ரக விமானங்கள் - 02

எச்.எஸ் - 748 மற்றும் செஸ்னா - 421 விமானங்கள் - 03

தொலை இயக்கி வேவு விமானம் - 01

பி.ரி - 06, சி.ஜே - 06, செஸ்னா - 150, எஸ்.எஃப் - 260, ரி.பி. விமானங்கள் விமானப்படையிடம் உள்ளன என்று சிறிலங்கா அரசு தெரிவிக்கின்றது.

இவற்றில் பெரும்பாலானவை நம்பகமான பறப்புக்குரியனவாக இல்லாததால் மிகச் சில விமானங்களே பயன்பாட்டில் உள்ளன.

கடற்படையிடம் 18 ஆயிரம் படையினர் உள்ளனர்.

கடற்படையிடம் 50 சுற்றுக்காவல் கலங்கள் உள்ளன.

இவற்றில் சீனாவின் லுசான் கிளாஸ், ஹைசுய் கிளாஸ், சங்காய் - 02 கிளாஸ், டோறா வகையில் கலங்கள் உள்ளன.

அத்துடன் அமெரிக்க கரேஜஸ் கப்பல், இந்திய சுகன்யா கிளாஸ் கப்பல் என்பனவும்

தரையிறக்கக் கப்பல்களும் தம்மிடம் உள்ளதாக சிறிலங்கா அரசு தெரிவிக்கின்றது.

நன்றி : புதினம்.காம்

நண்பனின் (தனேஷ்) கவிதை

"செருப்பில்லாமல் நடக்கும் போதுதான்
முள் குத்துகிறது,
நீ இல்லாமல் நடக்கும் போதுதான்
வாழ்க்கையே குத்துகிறது முள்ளாய்!"

"மரணப்பொழுதில்,
என் கண்கள் வாங்கிக்கொண்டு போகும்
கடைசிப் பரிசு
உன் முகமாக இருக்கட்டுமே!"

"நான் : போ! போ! போறதுக்கு முன்னாடி எனக்கு ஒரு காரியம் பண்ணிட்டுப்போ
நீ : என்ன?
நான் : அதான் ........ காரியம்"

எனது பல்கலைக்கழக நண்பனின் காதல் கவிதை இங்கே அரங்கேறுகின்றது....

கணணி ஆணா? பெண்ணா?

அண்மையில் என் நண்பனைக் கண்ட போது அவனிடம் சாதாரணமாக கேட்டேன். "டேய் மச்சான்! கம்பியூட்டர் ஆணா? பெண்ணா?".

சிறிது நேரம் யோசித்தபின் அவன் சொன்னான். "அது பெண்ணடா மச்சி"

எனக்கு தலைகால் புரியாத கோவம். இப்படி ஒரு வினைத்திறன் மிக்க இயந்திரத்ததை பெண் என்று கூறுவதா???

அப்போ அவன் என் ஆதங்கத்ததைப் புரிந்து கொண்டு அதற்கான காரணத்தைக் கூறினான்

  1. இதனுடன் பழக ஆரம்பிப்பது கடினம் ஆரம்பித்து விட்டால் நிறுத்த முடியாது
  2. இது பல பிரைச்சனைகளைத் தீர்க்க உதவும் ஆனால் இதுவே தலையாய பிரைச்சனையாய் இருக்கும்.
  3. புது மாடல்களின் வரவால் பழைய மாடல்களின் மவுசு, விலை அதிரடியாகக்குறையும்.

இப்போ நான் அமைதியாகிவிட்டேன் அருமையான வாதம். என்னால் மறுத்துப் பேசமுடியவில்லை......

உண்மைகள் கசப்பானவை